மார்ச் மாதத்தில் பல ராசிகளில் மாற்றங்கள் நிகழப் போகிறது. குறிப்பாக, 5 ராசிக்காரர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழப்போகிறது. இத்தனை ஆண்டுகளாக நீங்கள் அனுபவித்து வந்த கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகிறது. இதில் நீங்கள் செய்ய வேண்டியது நிதானமும், வாயடக்கமும் தான். எனவே, வரவிருக்கும் சனியின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்கு யோகம் என்று தற்போது பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு மிகவும் நன்மையைத் தரக்கூடியதாக இனி சனி பெயர்ச்சி இருக்கப் போகிறது. தொழில், வியாபாரம் செய்யக்கூடிய ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு, கடன் பிரச்சனை தீர்வுகளோடு, உங்களுக்கு வர வேண்டிய பணம் உங்களுக்கு வந்து சேரும். ஒவ்வொருவரும் தங்கள் முன்னேற்றத்திற்காக முயற்சிகள் எடுத்திருப்பார்கள். ஆனால், எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆனால், சனியின் அமைப்பால் ரிஷப ராசியினரின் ஒவ்வொரு முயற்சியிலும் சிறப்பான லாபத்தைப் பெறலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு பெற வாய்ப்புள்ளது. வேலை, தொழிலில் இரட்டிப்பு லாபம் பெறலாம்.
மிதுனம்
சனி பகவான் மிதுன ராசிக்கு கர்ம ஸ்தானத்திலேயே அமர்வதால் தொழில், வேலை நிமித்தமாக எந்த ஒரு முயற்சி எடுத்தாலும் அதில் இனி வெற்றி கிடைக்கும். உங்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டாலும், அதை சளைக்காமல் செய்து மன தைரியம், ஆற்றலை சனி தருவார். உங்களின் கர்மாவை நல்ல வகையில் வழி நடத்துவார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு மிகவும் கடுமையாக உழைப்பீர்கள் அதன் மூலம், லாபமும் நற்பெயரும் உங்களுக்கு கிடைக்கும்.
கடகம்
இதுவரை அஷ்டம சனியால் அவதிப்பட்டு வந்த கடக ராசியினருக்கு தற்போது பாக்கிய ஸ்தானத்தில் சனியாக அமரவுள்ளார். இதனால் முன் ஜென்மத்தில் செய்த நல்ல வினைக்கும், இந்த பிறவியில் செய்யும் நல்ல செயல்களுக்கும் உரிய நற்பலன்களைப் பெறுவீர்கள். 30 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்கிய ஸ்தானத்தில், கர்ம காரகன் சனியின் வருகை மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. உங்களுக்கு பல விதத்தில் நன்மை ஏற்படும். ஏழரை சனியின்போது எந்த அளவுக்கு சனி மோசமான பலன் தருகிறாரோ அதற்கு எதிர்மறையாக மிக சிறப்பான பலன்களை இனி சனி தர உள்ளார். இதுவரை அனுபவித்த துன்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் உச்சத்திற்கு கொண்டு செல்லக்கூடிய வகையில் சனி அமரவுள்ளார்.
விருச்சிகம்
இனி நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். நீங்கள் எடுக்கும் முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான காலமாக அமையும். முழுக்க முழுக்க உங்களுக்கு சனியின் ஆதரவு கிடைக்கும். சிலர் வெளியூர், வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகக் கூடும். திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
மகரம்
நீங்கள் இதுவரை அனுபவித்து வந்த ஏழரை சனியின் பாதிப்பில் இருந்து விடுபடுவது உங்களுக்கு பெரிய நிம்மதியை தரும். நீங்கள் செய்து முடிக்க நினைக்கும் வேலையிலும், அதற்கான முயற்சியிலும் தைரியத்தை தருவார். இதுவரை சனி பகவான் கொடுத்த பிரச்சனையில் இருந்து நீங்கள் பல அனுபவங்களை கற்று இருப்பீர்கள். அதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வழித் துணையாக அமையும்.
Read More : மருந்தே இல்லாமல் மூட்டு வலியை விரட்டும் பாரம்பரிய உளுந்து களி..!! இத்தனை மருத்துவ குணங்களா..?