fbpx

இந்த நோய்கள்தான் அதிகளவில் ஆண்களை பாதிக்கிறதாம்!… அபாயங்களை குறைப்பது எப்படி?

ஆரோக்கியத்தை பொறுத்தவரை பெண்களை விட ஆண்கள் சில நேரங்களில் தனித்துவ சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். தவிர சில குறிப்பிட்ட நோய்களுக்கு எளிதில் பாதிக்கப்படுகின்றனர். இந்த அபாயங்களை கருத்தில் கொண்டு நோய்களால் எளிதில் பாதிக்கப்படாமல் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆண்களின் ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தும். இங்கே ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான நோய்கள் பற்றியும், நோய் அபாயங்களை குறைப்பதற்கான வழிகளை பற்றியும் பார்ப்போம்.

இதய நோய் மற்றும் ஸ்ட்ரோக் உள்ளிட்ட கார்டியோவாஸ்குலர் நோய்கள் ஆண்களிடையே ஏற்படும் மரணத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. உயர் ரத்த அழுத்தம், ஹை கொலஸ்ட்ரால், புகைபழக்கம், உடல் பருமன் மற்றும் உடல் செயல்பாடுகளற்ற உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை போன்ற காரணிகள் இந்த ஆபத்தான நிலைமைகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. கார்டியோவாஸ்குலர் நோய் ஆபத்தை குறைக்க, ஆண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் இங்கே பட்டியலிடப்படுள்ளன.

ஆண்கள் தங்கள் டயட்டில் ஊட்டச்சத்துக்கள் மிக்க பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், லீன் ப்ரோட்டீன்களை சேர்த்து கொள்ள வேண்டும்.சேச்சுரேட்டட் ஃபேட்ஸ் , கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் உட்கொள்ளலை கட்டுப்படுத்த வேண்டும். ஸ்ட்ரென்த் ட்ரெயினிங் பயிற்சிகளுடன் இணைந்து வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான தீவிரம் கொண்ட ஏரோபிக் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மது மற்றும் புகைப்பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் அல்லது கணிசமாக கட்டுப்படுத்த வேண்டும்.

சீரான இடைவெளியில் ஆண்கள் தங்களது ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் லெவலை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும். இதற்காக வழக்கமான பரிசோதனைகள் மற்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை பின்பற்றுவது அவசியம். ஆண்களை பாதிக்கும் மிக பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாக இருக்கிறது ப்ராஸ்டேட் கேன்சர். இதனை துவக்கத்திலே கண்டறிவது பாதிப்புகளை குறைத்து வெற்றிகரமான சிகிச்சைக்கு உதவும். குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் அல்லது குடும்பத்தில் ஏற்கனவே இந்த வகை கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் ஆண்கள் வழக்கமான பரிசோதனையை கருத்தில் கொள்ள வேண்டும்.

Kokila

Next Post

இடுப்புப் பகுதியில் அதிக கொழுப்பு இருந்தால் ஆபத்து!… இடுப்பின் சுற்றளவு எவ்வளவு இருக்க வேண்டும்?

Tue Sep 19 , 2023
இடுப்புப் பகுதியில் அதிகளவு எடையையும் ஆபத்தான கொழுப்பையும் கொண்டிருப்பது பல்வேறு வாழ்வியல் நோய்களுக்கு வழிவகுக்கும் என, பிரிட்டனின் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஹெல்த் அண்ட் எக்ஸ்லன்ஸ் (NICE) வெளியிட்ட சமீபத்திய வழிகாட்டுதல்களில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், இடுப்புப் பகுதியின் சுற்றளவை எப்போதும் கண்காணிப்பது முக்கியம் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடுப்பின் சுற்றளவு எவ்வளவு இருக்க வேண்டும்? இடுப்புப்பகுதியில் அதிகளவு கொழுப்பு இருந்தால் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் என்பது குறித்து, பிரிட்டனின் நேஷனல் […]

You May Like