ஹைபர் டென்ஷன் (உயர் ரத்த அழுத்தம்) உச்சநிலைக்கு செல்லும் வரை பலரும் கண்டுகொள்வதே இல்லை. இதன் விளைவுகள் மிக மோசமானவை என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஹைபர் டென்ஷன் உண்டாவதற்கு முக்கியக் காரணமே நம்முடைய வாழ்க்கை முறை மாற்றங்களும் மன அழுத்தம் உள்ளிட்டவையும் தான். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையான காரணி நம்முடைய உணவுப் பழக்கங்கள்தான். நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் சில ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதிலும் ஏற்கனவே சில உணவுகளை தொடவே கூடாது. எனவே ஹைபர் டென்ஷன் உள்ளவங்க என்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை விரிவாக பார்க்கலாம்.
1)ஸ்நாக்ஸ் வகைகள்:
ஸ்நாக்ஸ் என்றாலே ஹைபர் டென்ஷன் உள்ளவர்களுக்கு ஆகாது. அதிலும் உப்பு நிறைய சேர்க்கப்பட்டிருக்கும் ஸ்நாக்ஸ் வகைகள் தான் உங்களின் முதல் எதிரி.சோடியம் நிறைந்த உணவுகள் (சிப்ஸ் வகைகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள், பேக்கிங் பொருள்கள்) ஆகியவற்றை சாப்பிட வேண்டும் என்று நினைத்துக் கூட பார்க்கக் கூடாது.
2) சூப் வகைகள்:
சூப் போன்ற திரவ உணவுகள் ஆரோக்கியமானவை தான். ஆனால் சிக்கன் சூப், வெஜிடபிள் சூப் என எதுவாக இருந்தாலும் வீட்டில் ஃபிரஷ்ஷாக செய்து சாப்பிடுங்கள்.கடைகளில் டின்களில் கிடைக்கும் ரெடிமேட் சூப் அல்லது பாக்கெட்டுகளில் கிடைக்கும் ரெடிமேட் சூப் மிக்ஸ் போன்றவற்றை பயன்படுத்தவே கூடாது. அதில் பதப்படுத்துவதற்காக சோடியம் மற்றும் பிற மோசமான ரசாயனபதப்படுத்திகள் சேர்க்கப்பட்டிருக்கும்.
3) ஆபத்தானவை ஊறுகாய்:
ஊறுகாயும் ஹைபர் டென்ஷன் பிரச்சினை உள்ளவர்களுக்கு மிக ஆபத்தான உணவு தான்.
எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும் அதை நீண்ட நாட்கள் கெட்டுப் போகமல் பதப்படுத்தி வைக்க அதிகமாக உப்பும் எண்ணெயும் பயன்படுத்துவோம். இது மிக சிறிய அளவில் சாப்பிட்டால் பெரிய அளவில் ரத்த அழுத்தத்தை உடனடியாக உயர்த்தும்.
4) ஸ்வீட் பானங்கள்:
இனிப்பு நிறைந்த பானங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல, ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்களுக்கும் நல்லதல்ல.சோடா, கார்பனேட்டட் பானங்கள், பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள் ஆகியவை உடனடியாக ரத்த அழுத்தத்தின் அளவை அதிகரிக்கச் செய்யும். மேலும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் அதன் அளவைக் கட்டாயம் குறைத்துக் கொள்ள வேண்டும்.
அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்ளலும் ரத்த அழுத்தத்தை உயர்த்தும். இந்த உணவு பழக்கங்களை சரிவர கடைப்பிடித்தால் ஹைபர் டென்ஷன் பிடியில் இருந்து விடுபடலாம். ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.
Read More: மீண்டும் ’மீசை’ மீது பந்தயம் கட்டிய மீசை ராஜேந்திரன்..!! நடிகர் விஜய்யால் அது முடியவே முடியாது..!!