fbpx

பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு இவர்களே காரணம்!. விமானப்படை ஷாக் ரிப்போர்ட்!.

Bipin Rawat: பாதுகாப்பு படைகளின் முதல் தலைமை தளபதியான பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு மனித பிழையே காரணம் என்று விமானப்படை அறிக்கை அளித்துள்ளது.

இந்திய பாதுகாப்பு படைகளின் முதலாவது தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 2021 டிசம்பர் 8-ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு வந்தார். அங்கிருந்து வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு எம்.ஐ. ரக ஹெலிகாப்டரில் வந்தபோது, குன்னூர் அடுத்த நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு மனித பிழையே காரணம் என்று விமானப்படை அறிக்கை அளித்துள்ளது. 2017 – 2022 வரையிலான ராணுவ நிலைக்குழு அறிக்கை, மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கடந்த 2017 – 2022 வரை 34 விமானப்படை விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளன. இதில், குன்னுாரில் பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தும் அடங்கும்.

இதற்கு விமானியின் தவறே காரணம். வானிலை மாற்றம் காரணமாக தடுமாறிய விமானி, ஹெலிகாப்டரை மேக கூட்டத்தின் நடுவே செலுத்தினார். பின் நிலைதடுமாறி நிலத்தில் விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியது. ஹெலிகாப்டரில் இருந்த ரிகார்டரில் பதிவான விபரங்களின்படி இது தெரிய வந்தது என்று கூறப்பட்டுள்ளது.

Readmore: ஆசிரியர் செய்யும் காரியமா இது? 3ம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் செய்த காரியம்..

Kokila

Next Post

கலை நயமிக்க காஞ்சி கைலாசநாதர் கோயில்.. ஊர்ந்துதான் வலம் வரவேண்டுமாம்..!! இப்படி ஒரு சிறப்பா..?

Fri Dec 20 , 2024
What is so special about Kanchi Kailasanathar Temple?

You May Like