fbpx

இவர்கள் எல்லாம் ரேஷன் அரிசியை பயன்படுத்தக் கூடாது!!! புதிதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு..

எவ்வளவு தான் நாகரீகம் வளர்ந்தாலும், வாழ்க்கை தரம் உயர்ந்தாலும் இன்னும் பலரின் வாழ்க்கை நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருள்களை நம்பி தான் உள்ளது. நாடு முழுவதும் புழுங்கல் அரசி, பச்சரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. இப்படி ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருள்களை வைத்து வாழ்க்கை நடத்தும் குடும்பங்கள் பல இன்றும் உள்ளது. தற்போது உள்ள காலகட்டத்தில், கண்டதை சாப்பிட்டு உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போய்விட்டது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பலருக்கு குறைந்து விட்டது.

இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசு, ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கியது. இந்த அரிசியில், அயர்ன் சத்து, வைட்டமின் பி12, போலிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி உள்ளதால், இது மற்ற அரிசிகளைப் போல் இல்லை. இதனால் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து, வைட்டமின்கள் மற்றும் அயர்ன் சத்துக்கள் கிடைகிறது. எக்ஸ்ட்ரூட்டர் என்ற கருவி மூலம் செறிவூட்டப்படும் இந்த அரிசி, PHH – AAY அட்டை தாரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. மேலும், இந்த அரிசியை மத்திய உணவுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகியவற்றிற்கு மத்திய அரசு வழங்குகிறது.

ஆனால், இந்த அரிசியால் உடலில் இரத்த அழுத்தம், குடலில் நோய் தொற்று, நீரிழவு நோய் ஏற்படும் என்ற செய்தி தற்போது தீயாக பரவி வருகிறது. இதனால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அச்சத்தை போக்க, தற்போது செறிவூட்டப்பட்ட அரிசியை இரத்த சோகை இருப்பவர்கள் பயன்படுத்த வேண்டாம் என்ற விழிப்புணர்வு வாசகத்தை அரிசி பையில் அச்சிடுமாறு, இந்திய உணவு கழகமானது தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Maha

Next Post

2 முறை தள்ளுபடியான ஜாமீன் மனு..!! சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை..!! செந்தில் பாலாஜி வெளியே வருவாரா..?

Wed Oct 11 , 2023
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் […]

You May Like