fbpx

’என்னை கொலை செய்தது இவர்கள்தான்’..!! மரணத்திற்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது..!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், தற்போது எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் கரைச்சுத்து புதுரைச் சேர்ந்த காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங். இவரை, கடந்த மே 2ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது மகன் கருத்தையா ஜாஃப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி 7.45 மணியளவில் இவரின் செல்போன் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஜெயக்குமார் தனசிங்கை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் தனசிங், உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவரை கொலை செய்தது யார் என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, அவரின் கைப்படவே, மரண வாக்குமூலம் என குறிப்பிட்டு எழுதிய கடிதத்தில், சிலர் தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்று எழுதியுள்ளார். மேலும், நாங்குநேரி எம்.எல்.ஏ., கள்ளிக்குளத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்த்ராஜ் உள்ளிட்டோரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். இதனால், அவர் அரசியல் காரணமாக கொலை செய்யப்பட்டாரா..? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read More : கர்ப்ப காலத்தில் பெண்கள் வெண்டைக்காய் சாப்பிடலாமா..? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்..?

Chella

Next Post

கோடை காலத்தில் இந்த உணவோடு சேர்த்து இதை மட்டும் சாப்பிடாதீங்க..!! பெரும் ஆபத்து..!!

Sat May 4 , 2024
கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், ஒவ்வொரு நாளும் வெப்பநிலை அதிகரித்து மக்களை சுட்டெரித்து வருகிறது. நம்முடைய உடலை சூடாக்குவதில் டயட் முக்கிய பங்கு வகிப்பது நம் எல்லாருக்குமே தெரிந்த விஷயம். கோடை காலத்தில் பல சுவையான பழங்கள் மற்றும் காய்கறிகள் கிடைத்தாலும், சூடான வெப்பநிலையில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், சில உணவுகள் மற்ற உணவுகளோடு சேரும் போது நமது செரிமான அமைப்பை பாதிக்கின்றன. […]

You May Like