fbpx

பர்தாவை கழற்ற சொன்னாங்க..!! நீட் தேர்வு எழுதாமல் திரும்பி வந்த அமீர் மகள்!!

நீட் தேர்வு எழுத போன போது என் மகள் போட்டிருந்த பர்தாவை கழற்றிவிட்டு உள்ளே வர சொன்னாங்க. என் பொண்ணு உங்க நீட் தேர்வே வேண்டாம் என்று சொல்லி வீட்டுக்கு வந்துருச்சு என்று இயக்குநரும் நடிகருமான அமீர் கூறியுள்ளார்.

2024 -2025-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு கடந்த மே 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் 557 நகரங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில்தேர்வு நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவாக இந்த ஆண்டு 23 லட்சம் மாணவ மாணவியர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த நிலையில் ‘உயிர் தமிழுக்கு’ என்ற திரைப்படத்தை பார்த்த பின்னர் நடிகர் அமீர் மற்றும் சீமான் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமீர், “என்னுடைய பொண்ணு 2 ஆண்டுக்கு முன்னாடி நீட் தேர்வு எழுத போனாங்க. நான் அதை எந்த செய்தி சேனல்களிலும் சொல்லவில்லை. நீட் தேர்வு எழுத போன போது என் மகள் போட்டிருந்த பர்தாவை கழற்றிவிட்டு உள்ளே வர சொன்னாங்க. என் பொண்ணு உங்க நீட் தேர்வே வேண்டாம் என்று சொல்லி வீட்டுக்கு வந்துருச்சு.. ஏனென்றால் ஆடை, தோடு, செயின்களில் பிட் வைக்க முடியும் என்று சொல்வது மாணவர்களின் மனநிலையை பாதிக்கிறது” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சீமான், “2 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள் ஒருவர் தோல்வியடைந்து விடுகிறார். ஒருவர் வெற்றி பெற்றுவிடுகிறார். நீட் தேர்வில் வெற்றி பெற்றவர் அரசு நடத்தும் தேர்வில் 1,200க்கு 800 மதிப்பெண் பெறுகிறார். நீட் தேர்வில் தோல்வியுற்றவர் 1200க்கு 1,199 மதிப்பெண் எடுக்கிறார். ஆனால் இப்போது நீட்டில் தோற்றதால் 1200க்கு 1,199 மார்க் எடுத்தவரை நீங்கள் மருத்துவம் படிக்க தகுதியற்றவர் என்று சொல்கிறீர்கள். அப்போது ப்ளஸ் டூ தேர்வு எதற்கு?.. தூக்கிவிடுங்கள். நேரடியாக நீட் தேர்வு வைக்கலாம் அல்லவா?.. எதற்கு பிளஸ் டூ மதிப்பெண் எதற்கு?.. நேரடியாக நீட்டுக்கான கோச்சிங்கை மட்டும் வைத்துவிடுங்கள். சரி அப்படியே நீட் தேர்வில் பாஸ் ஆகி வந்தால், எனக்கு பாடம் எடுக்கிற பேராசிரியர் யார் என்றால் அவரும் நீட் எழுதி வந்தவர் கிடையாது. பழைய பேராசிரியர் தான். பாடத்திட்டத்தில் ஏதும் மாற்றம் இருக்கா.. இல்லை அதே பாடத்திட்டம் தான்..

அப்போ எப்படி தரமான மருத்துவம் கிடைக்கும். தரமான மருத்துவரை நீங்க எப்படி உருவாக்குவீர்கள்.. நீட்டையே தனியார் நிறுவனம் தான் நடத்துகிறது. அதையும் ஏம் அமெரிக்கா நிறுவனம் நடத்துகிறது?.. பரீட்சை நடத்துவதும் அமெரிக்க நிறுவனம், கோச்சிங் கொடுப்பதும் தனியார் நிறுவனம் தா.. இதை நீங்கள் தான் கேட்க வேண்டும். நீட் தேர்வு போலி மருத்துவரை தான் உருவாக்குகிறது. தரமான மருத்துவர் உருவாக வேண்டும் என்று நினைக்கின்ற போது எதற்காக அந்த தேர்வை வெளிநாட்டு நிறுவனம் நடத்த வேண்டும்? அதற்கு என்ன அவசியம் வந்தது. வட மாநிலங்களில் எங்கேயாவது தோடை கழற்றி, மூக்குத்தியை கழற்றி, துப்பட்டாவை கழற்றி பார்த்தது இல்லை. இங்கு தமிழ்நாட்டு மாணவர்களை தான் தோடுகளை கழற்றுங்கள் என்று கூறுகிறீர்கள். வாக்கு எந்திரத்தில் குளறுபடி வராது என்று சொல்லும் நீங்கள் தான் நீட் தேர்வில் பிட் கொண்டு வந்துவிடுவார்கள் என்று மூக்குத்தி, கம்மல், துப்பட்டா, செயின்களை கழற்ற கூறுகிறீர்கள்” என்று சீமான் தெரிவித்தார். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை தற்போது போட்டுடைத்துள்ளார் அமீர். பர்தாவை கழற்ற சொன்ன விவகாரம் பேசுபொருளாகி வருகிறது.

Read More: என்னது அதானி குழுமம் சொத்துக்களை விற்பனை செய்கிறதா? வாங்குவது யார் தெரியுமா..?

Rupa

Next Post

Tn Govt: மே 24-ம் தேதி வரை 250 பீகார் கல்வி அலுவலர்களுக்கு தமிழக அரசு பயிற்சி...!

Wed May 8 , 2024
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் (SED) திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, பீகார் கல்வித் துறை அதிகாரிகள் மே 24 ஆம் தேதி வரை தலைநகரில் சிறப்புப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு துறையின் சுற்றறிக்கையின்படி, பீகார் மாநிலத்தின் 250 கல்வி அதிகாரிகளுக்கு மாநிலத்தின் திட்டங்களைப் பற்றி அறிய ஐந்து கட்டங்களாக சிறப்புப் பயிற்சி நடத்தப்படுகிறது. ஐந்து நாள் குடியிருப்புப் பயிற்சி ஏப்ரல் மாதம் ஐந்து கட்டங்களாகத் […]

You May Like