fbpx

இவர்கள் ஜூன் 30ஆம் தேதி வரை அரசுப் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்..!! அமைச்சர் சிவசங்கர் சூப்பர் அறிவிப்பு..!!

சுதந்திர போராட்ட வீரர்களுக்கான கட்டணமில்லா பயண அட்டையை ஜூன் 30ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சுதந்திரப் போராட்ட வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கும் வகையில், பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக கடந்த 2023 செப்டம்பர் 7ஆம் தேதி மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இணையதளம் மூலம் பயண அட்டை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், தற்போது அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் இணையவழியில் பயண அட்டை பெறும் நடைமுறையை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

எனவே, இதற்கு போதிய கால அவகாசம் தேவைப்படுவதால், ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் மார்ச் 31ஆம் தேதி வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டையை ஜூன் 30ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம்” என அறிவித்துள்ளார்.

Read More : எதிர்க்கட்சி To ஆளுங்கட்சி..!! எதுக்கு இப்படி மாத்தி மாத்தி பேசுறீங்க..!! திமுக அரசை கண்டித்து நாளை உண்ணாவிரதப் போராட்டம்..!! – ஜாக்டோ ஜியோ

English Summary

Minister Sivashankar has said that the free travel card for freedom fighters can be used until June 30th.

Chella

Next Post

’சேகர்பாபு இப்படி சொல்லிட்டாரே’..!! திமுக கூட்டணியில் இருந்து விலகுவது உறுதி..? வேல்முருகன் எடுத்த அதிரடி முடிவு..!!

Sat Mar 22 , 2025
Sekarbabu has said that Velmurugan himself can decide to withdraw from the DMK alliance.

You May Like