fbpx

’அவங்க என்னை ஏமாத்திட்டாங்க’..!! தயாரிப்பாளர், இயக்குநர் மீது பரபரப்பு புகார்..!! ரூ.30 லட்சம் அபேஸ்..!!

இலங்கை தமிழர் சியாமளா. தொழிலதிபரான இவர் அறம் பட இயக்குநரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகருமான கோபி நயினார் மற்றும் தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சியாமளா, “கடந்த 2018ஆம் ஆண்டு சினிமா நட்பு வட்டாரங்கள் மூலமாக ஆக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் அறம்பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நடிகர் ஜெய்யை வைத்து ’கருப்பர் நகரம்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வருவதாகவும், அந்த படத்திற்கு இணைந்து தயாரிப்பாளராக செயல்படுமாறும் தன்னிடம் கூறினார்.

இதனால், பல்வேறு தவணையாக 30 லட்சம் ரூபாய் கொடுத்தேன். அதில், 5 லட்சம் ரூபாயை கையில் பணமாக கொடுத்தேன். பின்னர் இத்திரைப்படத்தின் பூஜை முடிந்து 3 நாட்கள் ஜெய்யை வைத்து கோபி நாயினார் படப்படிப்பு நடத்தினார். தானும் 3 நாட்கள் அந்த சூட்டிங்கில் கலந்து கொண்டேன். பின்னர் 6 மாதத்தில் படத்தை முடித்துவிடலாம். படத்தின் லாபத்தில் 25 சதவீதம் தருவதாகவும் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் பிறகு பிரான்ஸ் சென்றுவிட்டேன். விஜய் அமிர்தராஜ் மற்றும் இயக்குநர் கோபி நாயினார் ஆகியோர் தனது தொடர்பை துண்டித்தனர். 

பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். இயக்குநர் கோபி நயினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட செயலாளராக உள்ளதால் தலைவர் திருமாவளவன் தலையிட்டு எனது பணத்தை பெற்று தரவேண்டும். முதல்வர் முக.ஸ்டான்லின் தனக்கு உதவி புரிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? மின்சார வாரியம் தகவல்!

Wed Jun 7 , 2023
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.  மின் வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்குமாறு, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் வாரியம் விண்ணப்பித்தது. இதனையடுத்து மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. அதன்பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வீடுகள் மற்றும் […]

You May Like