fbpx

சினிமாவிலும் அரசியல் செய்றாங்க.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் வேதனை பதிவு..!!

தமிழ் சின்னத்திரையில் முன்னணியில் இருக்கும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. விஜய் டிவியின் ப்ரைம்டைம் சீரியலான இதில், வெற்றி வசந்த், கோமதி பிரியா, ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில் நடிகரும் இயக்குனருமான ஆர்.சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். டி.ஆர்.பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வரும் சிறகடிக்க ஆசை சீரியல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

இந்த சீரியலில் நாயகனின் நண்பர் கேரக்டரில் நடித்து வருபவர் பழனியப்பன். விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 50-க்கு மேற்பட்ட சின்னத்திரை சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பழனியப்பன், அவ்வப்போது சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து முக்கிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறார். 

இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வேதனையான வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்கள். அந்த வீடியோவில், “தற்போதைய சூழ்நிலையில் எல்லா இடங்களிலும் அரசியல் புகுந்து விட்டது. ஒருவர் பிரபலமாக வேண்டும் என்றால் அடுத்தவர்களை தங்களுடைய சுய லாபத்திற்காக வியாபார தந்திரத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதிலும் சமூக வலைதளத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சிலர் அதை வைத்து அடுத்தவர்களை ஏமாற்றி பிரபலமாகுகிறார்கள்” என பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இணையத்தில் வைரலான அந்த வீடியோ அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது. சமீபத்தில் அவருக்கு ஒரு நிகழ்ச்சியில் அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் இவர் யார்? இவர் எந்த சீரியலில் நடித்திருக்கிறார்? இவர் செய்த சாதனை எதுவும் சொல்லப்படாமல் ஒரு அவார்ட் கொடுத்திருக்கிறார்கள்.

பொதுவாக கலைஞர்கள் அவர்களுடைய திறமைக்கான அங்கீகாரத்தை தான் விரும்புவார்கள். வருமானம் எல்லோருக்கும் முக்கியமானதாக இருந்தாலும் தங்களுடைய திறமைக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கும். அதுபோலத்தான் நடிகர் பழனியப்பன் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Read more ; ‘I LOVE WAYANAD’ ஒரே டி-சர்ட்டில் மொத்த வயநாட்டு மக்களையும் கவர்ந்த ராகுல் காந்தி..!!

English Summary

They do politics in cinema too. Serial actor registration.

Next Post

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்... தவெக நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட உத்தரவு..!! அடுத்த மூவ் என்ன?

Mon Nov 11 , 2024
TVK chief instructs volunteers to campaign in autos for voter registration camp

You May Like