fbpx

’பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு அக்கறை காட்டுவதில்லை’..!! – ஐகோர்ட் கிளை

ஆன்லைன் விளையாட்டுகள் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு எப்படி தெரியவந்தது என பெற்றோர்களிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி, ரம்மி போன்றவற்றை விளையாடுவதை தவிர்க்கும் வகையில், செயலிகளில் உள்நுழைய வயதை உறுதி செய்யும் ஆதார் அல்லது பான்கார்டு சான்றிதழை பதிவேற்றம் செய்யக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ’8 வயதிற்கு கீழானவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுக்கள் தெரியவந்தது எப்படி? பெற்றோர்களே என கேள்வி எழுப்பினர்.

’பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு அக்கறை காட்டுவதில்லை’..!! - ஐகோர்ட் கிளை
கோப்புப் படம்

மேலும், இதில் அரசுக்கு உள்ளதை விட அதிக பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை காட்டுவதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை. அதன் விளைவாகவே இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன’ என கருத்து தெரிவித்து, வழக்கு தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலர், மத்திய நிதித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Chella

Next Post

#கர்நாடகா: சுமார் 1.50 எடையுள்ள நாணயத்தை விழுங்கிய முதியவர்..!

Mon Nov 28 , 2022
கர்நாடகா நாட்டு பகுதியில் பாகல்கோட் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள லிங்கக்கூரில் தியாமப்பா ஹரிஜன் (58) வயதானவர் ஒருவர் வசித்து வருகிறார்.இவர் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி சில நாணயங்களை விழுங்கி வந்திருக்கிறார். கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையில் காண்பித்துள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் வழங்கிய மாத்திரைகளை உண்டு வந்துள்ளார் இருப்பினும் வயிற்று வலி சரியாகவில்லை. மேலும் எக்ஸ்ரே, என்டோஸ்கோபி செய்து பார்த்துள்ளனர்.  இந்த நிலையில் […]

You May Like