fbpx

“32KM சொன்னாங்க 19KM தான் கொடுக்குது” மைலேஜில் பொய் சொன்ன கார் நிறுவனம்…! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!!

கேரள மாநிலத்தைச் சார்ந்த சௌதாமினி என்பவர் கடந்த 2014 ஆம் வருடம் நவம்பர் மாதம் போர்ட் கிளாசிக் டீசல் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை 8,94,876 ரூபாய் என்று சொல்லப்படுகிறது. கைரலி போர்ட் என்ற ஷோரூமில் இந்த கார் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த காரின் விற்பனையை அதிகப்படுத்துவதற்காக கொடுக்கப்பட்ட விளம்பரங்களில் ஒரு லிட்டருக்கு 32 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது இதனை நம்பித்தான் சௌதாமினி இந்த காரை வாங்கியுள்ளார்.

ஆனாலும் விளம்பரங்களில் தெரிவிக்கப்பட்ட அளவிற்கு மைலேஜ் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு மிகவும் குறைவாகத்தான் இந்த கார் மைலேஜ் கொடுத்து இருக்கிறது. ஒரு லிட்டருக்கு 16 கிலோமீட்டர் வரையில் மட்டுமே மைலேஜ் கிடைத்ததாக தகவல் கிடைத்திருக்கிறது. ஆகவே சௌதாமினி இதனால் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்.

ஆனால் மற்ற நபர்களைப் போல சோர்ந்து போய் விடாமல் இந்த பிரச்சனையை நுகர்வோர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு அவர் கொண்டு சென்றுள்ளார். முதலில் சௌதாமினி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் எதிர்தரப்பிடம் இருந்து அதற்கு எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை .

இதனாலேயே நுகர்வோர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது இந்த வழக்கின் விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சூழ்நிலையில் தற்சமயம் இதற்கான தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர் தரப்பான கைரலி போர்ட் மற்றும் போர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் உள்ளிட்டோர் முன்வைத்த வாதங்களை நீதிமன்றம் ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சாலைகளில் இருக்கின்ற தன்மை போக்குவரத்து நெரிசல் மற்றும் இதனை ஓட்டும் விதம் உள்ளிட்ட காரணிகளை பொறுத்து தான் மைலேஜ் கிடைக்கும் என்று எதிர் தரப்பினர் வாதம் செய்தனர்.

அதோடு விளம்பரங்களில் தாங்கள் குறிப்பிட்ட மைலேஜ், 3வது நபரால் கண்டறியப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் இந்த வாதங்கள் எதுவும் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த காரின் உண்மையான மைலேஜ் எவ்வளவு என்பதை கண்டுபிடிப்பதற்காக ஒரு நிபுணரை நீதிமன்றம் நியமனம் செய்தது. அந்த நிபுணர் காரை சோதனை செய்து தன்னுடைய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையில் கார் 1 லிட்டருக்கு 19.6 கிலோ மீட்டர் வரை மட்டுமே மைலேஜ் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது விளம்பரங்களில் தெரிவிக்கப்பட்டதை விடவும் 40% குறைவான மைலேஜ் மட்டுமே இந்த கார் வழங்குகிறது என்பது இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த போர்ட் கார் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தற்சமயம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. ஒட்டுமொத்தமாக சௌதாமினிக்கு 3.10 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் கூறியிருக்கிறது.

கேரளா நுகர்வோர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு, கார் உரிமையாளர்கள் இடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. இனிவரும் காலங்களில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் மைலேஜ் தொடர்பான விவகாரத்தில் பொய்யான வாக்குறுதிகளை வழங்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

கார் உற்பத்தியாளரான போர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் விற்பனையாளரான கைரலி போர்ட் உள்ளிட்ட 2 நிறுவனங்களும் நியாயமே இல்லாத விதத்தில் வர்த்தகம் செய்திருப்பதாக நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

பலர் மைலேஜ்க்கு அதிக முக்கியத்துவம் வழங்க கூடியவர்களாக இருக்கிறார்கள். நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பது தான் இதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது. ஓட்டும் விதம் ,சாலைகளின் தன்மை உள்ளிட்டவற்றை பொறுத்துதான் மைலேஜ் கிடைக்கும் என்பது உண்மை தான்.

இருந்தாலும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் சொல்லும் மைலேஜிக்கும், கார் உரிமையாளர்களுக்கு கிடைக்கும் மைலேஜிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஆகவே தான் நீதிமன்றம் தன்னுடைய அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ளது. இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கார் உரிமையாளர்கள் இடையே இந்த தீர்ப்பு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. அத்துடன் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் கார் உரிமையாளர்களுக்கு இதன் மூலமாக ஏற்பட்டிருக்கிறது.

Kathir

Next Post

கடைசி வாய்ப்பு...! அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு...! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...! முழு விவரம் உள்ளே...

Mon Dec 5 , 2022
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் லயோலா கல்லூரி இணைந்து வழங்கும் ஊடகவியல் சான்றிதழ் படிப்புக்கு இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் சென்னையிலுள்ள லயோலா கல்லூரியும் இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன. ஊடகத் துறையில் ஆர்வம் கொண்டு செய்தியாளராக, எழுத்தாளராக, கருத்தாளராக தடம் பதிக்க விரும்பும் இளம் தலைமுறைக்குப் பெரும் வாய்ப்பாக இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊடகத்துறையின் […]

You May Like