fbpx

’அப்போவே சொன்னாங்க.. நான் தான் கேட்கல’..!! ரஜினி பட ஷூட்டிங்கில் நடிகைக்கு நேர்ந்த சோகம்..!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 170-வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை த.செ.ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்தில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு முதலில் கேரளாவில் பூஜையுடன் தொடங்கியது. பிறகு கன்னியாகுமரி, மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. தற்போது சென்னையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் கூட இதன் படப்பிடிப்பில் கமல், ரஜினி இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரித்திகா சிங்கிற்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் கடுமையான ஆக்‌ஷன் காட்சி ஒன்றில் நடித்த போது தனக்கு கையில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஓநாய், மனிதனுடன் சண்டை போட்டது போன்று இருக்கிறது எனவும் அந்தப் புகைப்படங்களில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை எச்சரித்து கொண்டே இருந்தார்கள். கண்ணாடி இருக்கிறது எனச் சொன்னார்கள். ஆனால், இது எல்லாம் நடப்பது தான். சில நேரங்களில் இதுபோன்ற விஷயங்களை நாம் கண்ட்ரோல் செய்ய முடியாது தானே! நான் கண்ட்ரோல் இழந்ததால் இப்படி நடந்துவிட்டது” என கூறியுள்ளார்.

Chella

Next Post

தாயின் சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த 22 வயது இளைஞர்.! நாட்டை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்.!

Tue Dec 5 , 2023
மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தாயின் சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த இளைஞரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் அவர் கைது செய்யப்படவில்லை என காவல்துறையை அறிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநில தலைநகரான இந்தூர் அருகில் உள்ள பகுதியில் 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் 70 வயது பெண்ணின் சடலத்தை பாலியல் வன்புணர்வு […]

You May Like