fbpx

இவர்கள் எல்லோருக்கும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்…! முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை….!

அரசு கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் பணியமர்த்தவும், கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்க வழிமுறைகளை வகுக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தனது அறிக்கையில்; முனைவர் பட்டம், முதுநிலைப் பட்டம் பெற்றவர்களை எல்லாம் வெறும் 20,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிப்பது என்பது ஆசிரியர் தொழிலையே அவமதிப்பதற்கும் சமம். ஒருவேளை, தற்போது தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டாலும், ஒருசில ஆண்டுகள் கழித்து அவர்களை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகளையாவது அரசு வகுக்க வேண்டும்.

அப்பொழுதுதான், கவுரவ விரிவுரையாளர்களும் ஆர்வமாக பணியாற்றுவார்கள். இல்லையெனில், அவர்களுடைய ஆர்வம் குறைவதோடு, தனியார் கல்லூரிகளில் அதிக சம்பளத்தில் நிரந்தரப் பணி கிடைக்குமேயானால், அங்கு செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

இதன் காரணமாக, அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படும். எனவே, அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் தரமான உயர் கல்வியைப் பெற்று, அதன்மூலம் வேலைவாய்ப்பினை அடையும் வகையில், அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் பணியமர்த்தவும், கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகளை வகுக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும், தொகுப்பூதியத்தில் பணியமர்த்தும் முறையினை கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Vignesh

Next Post

டைட்டானிக் கப்பலை காண சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயம்……! டைட்டானிக் கப்பலை சுற்றி இருக்கக்கூடிய அமானுஷ்யங்கள் எங்கே சென்றது நீர்மூழ்கி கப்பல்……?

Sat Jun 24 , 2023
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை காண்பதற்காக சென்ற சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கி கப்பல் அந்த தொகுதியில் இருந்து மாயமானது ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழத்தி உள்ளது. சற்றேற குறைய 2224 பேருடன் சென்ற டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இருந்த ஒரு பனிப்பாறையில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தின் காரணமாக, கடலில் மூழ்கிய அந்த கப்பலில் பயணித்த சுமார் 1500 பேர் மரணம் அடைந்தனர். […]

You May Like