GeneralElections2024: இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தலுக்கு அரசியல் காட்சிகள் அனைத்தும் தயாராகி வருகிறது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவிப்பதற்காக டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.
இது குறித்து பேசிய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், வன்முறை இன்றி அமைதியாக இந்த நாடாளுமன்ற தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாடு முழுவதும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 96,88,21,926 பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் – 46,72,31,994 பேர், பெண் வாக்காளர்கள் – 47,15,41,888 பேர், மூன்றாம் பாலினத்தவர்- 48,044 பேர் ஆகும். இதில் 1.8கோடி முதல் தலைமுறை வாக்காளர்கள். 85 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டிலிருந்து வாக்குப்பதிவு செய்யலாம்.
மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், இந்தியாவில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத ரீதியாகவோ தனிப்பட்ட முறையிலோ விமர்சித்து பரப்புரையில் ஈடுபடக்கூடாது. விளம்பரங்களை நம்ப தகுந்த செய்திகளாக்க முயற்சிக்க கூடாது.
தேர்தல் பரப்புரையில் குழந்தைகளையோ, மாற்றுத்திறனாளிகளையோ பயன்படுத்தக் கூடாது. அரசியல் காட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் கண்ணியத்துடன் பரப்புரையை ஈடுபட வேண்டும். சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யலாம் அனால் போலி செய்தி பரப்பக்கூடாது. மாநில எல்லைகள் ட்ரான் மூலம் கண்காணிக்கப்படும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வங்கிகள் பணம் எடுத்து செல்லக் கூடாது.