fbpx

’என்னை சில நாட்கள் தலைமறைவாக இருக்க சொன்னார்கள்’..!! சபாநாயகர் அப்பாவு அதிர்ச்சி தகவல்..!!

நெல்லை மாவட்டத்தில் இன்று கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கினார். அப்போது, மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டது தொடர்பாகவும், திண்டுக்கல்லில் அரசு மருத்துவர்கள் மிரட்டி பணம் பறிக்கப்பட்டது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டது.

அப்போது பதிலளித்த அவர், ”மத்திய அரசானது அங்கு இருக்கக்கூடிய புலனாய்வு, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகிய 3 துறைகளிலும் இடைத்தரகர்கள் பல பேர் செயல்படுகிறார்கள். அவ்வாறு இருக்கக்கூடிய இடைத்தரகர்கள் பலர் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களை மிரட்டி, அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து பணம் பறிக்கும் கும்பலாக செயல்படுகின்றனர்.

எனக்கும் இதுபோன்று ஒரு இடைத்தரகர், என் நண்பர்கள் மூலமாக எனக்கு தெரிந்த நபர்கள் மூலமாக என்னிடம் பேசினார். நான் எந்த ஒரு பதிலும் கொடுக்கவில்லை. இருப்பினும் அவர்கள் என்னை சில நாட்கள் தலைமறைவாக இருக்க சொன்னார்கள். அதுமட்டுமின்றி, சில காலத்திற்கு என்னுடைய தொலைபேசி எண்ணை மாற்றிவிட வேண்டும் என சொன்னார்கள்” என்று பல தகவல்களை சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

Chella

Next Post

’அவள எதுக்கு நீ பாக்குற’..!! காதலனின் கண்ணில் வெறிநாய்க்கடி ஊசியை குத்திய காதலி..!! அதிர்ச்சி சம்பவம்..!!

Sat Dec 2 , 2023
அமெரிக்காவின் மியாமி டே கவுண்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்த்ரா ஜிமினெஸ் (44). இவர், தனது காதலருடன் கடந்த 8 வருடங்களாக ஒன்றாக வசித்து வருகிறார். இந்நிலையில், தன்னுடைய காதலர் வேறு பெண்களைப் பார்ப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத காதலி ஜிமினெஸ், காதலரின் கண்ணில் வெறிநாய்க்கடிக்குச் செலுத்தப்படும் ஊசியை குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். ஏற்கனவே தாம் வளர்க்கும் நாய்க்கு ஊசி போடுவதற்காக இரண்டு வெறிநாய்க்கடி ஊசிகளை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. காயம் அடைந்த காதலர், உடனடியாக […]

You May Like