fbpx

என்னை கொன்னுடுவாங்க, வெளியான காஜல் அகர்வால் வீடியோ..!

 நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய அளவில் முன்னணி நாயகியாக இருந்தவர். தற்போது திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயாக உள்ள நிலையில், தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தான் இதுவரை ஏற்காத கேரக்டரில் நடித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தெலுங்கில் பகவந்த் கேசரி மற்றும் சத்யபாமா ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இன்றைய தினம் காஜல் அகர்வால் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு நேரிலும் சமூக வலைதளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே காஜல் அகர்வால் பிறந்தநாளையொட்டி சத்யபாமா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இந்தியன் 2 குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த காஜல் அகர்வால், இந்தியன் 2 மிகவும் வித்தியாசமான படம் என்று கூறியுள்ளார். இதுபோன்ற கேரக்டரில் தான் இதற்கு முன்பு நடித்ததில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய காஜல் அகர்வால், இதற்கு மேல் படம் குறித்து தான் எதுவும் கூற முடியாது என்றும் அப்படி செய்தால் படக்குழுவினர் தன்னை கொன்று விடுவார்கள் என்றும் நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்துவரும் காஜல் அகர்வால் முன்னதாக கர்ப்பமான சூழலில் படத்திலிருந்து நீக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் குழந்தை பிறப்பிற்கு பிறகு தன்னுடைய பிட்னசை சிறப்பாக பராமரித்த காஜல் அகர்வால் தொடர்ந்து படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இந்தியன் 2 படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மாதத்திற்குள் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருபுறம் படத்தின் டப்பிங் பணிகளும் நடந்து வரும் சூழலில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

Maha

Next Post

துறை இல்லாத அமைச்சராக தொடர்கிறார் செந்தில்பாலாஜி….! அரசு இணையதளத்தில் செய்யப்பட்ட புதிய மாற்றம்…..!

Mon Jun 19 , 2023
தமிழக அரசு இணையதளத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயருக்கு கீழ் இருந்த துறைகள் நீக்கப்பட்டிருக்கிறது சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றம் ஜூன் மாதம் 28ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து நிர்வாக காரணத்திற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி கவனத்திற்கு கீழ இருந்த மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை உள்ளிட்ட […]

You May Like