fbpx

அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் இவர்கள் சேர முடியாது.. அக்.1 முதல் அமலுக்கு வரும் புதிய விதி…

அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நோக்கில், 2015ல் தொடங்கப்பட்ட அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வருமான வரி செலுத்துவோர் அடல் பென்ஷன் யோஜனாவுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டாம் என்று நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.. இந்த புதிய உத்தரவு 2022 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது.

மத்திய நிதி அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ வருமான வரிச் சட்டத்தின்படி வருமான வரி செலுத்தும் எந்தவொரு இந்திய குடிமகனும் அக்டோபர் 1, 2022 முதல் அடல் பென்ஷன் யோஜனாவில் சேரத் தகுதி பெறமாட்டார்கள். அக்டோபர் 1ம் தேதி அல்லது அதற்குப் பிறகு யாராவது இந்தத் திட்டத்தில் சேர்ந்து வருமான வரி செலுத்துபவராகக் கண்டறியப்பட்டால், அவர்களின் கணக்கு உடனடியாக மூடப்படும் அதுவரை டெபாசிட் செய்யப்பட்ட ஓய்வூதியத் தொகையும் திருப்பித் தரப்படும்.. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

அடல் பென்ஷன் யோஜனாவிற்கு விண்ணப்பிக்க என்ன விதிகள் உள்ளன..? தற்போதைய விதிகளின்படி, எந்தவொரு வங்கியிலும் அல்லது தபால் அலுவலகத்திலும் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் 18-40 வயதுக்குட்பட்ட எந்தவொரு குடிமகனும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 1, 2022 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளின்படி, வருமான வரி செலுத்துவோர் அடல் பென்ஷன் யோஜனாவில் பங்கேற்க முடியாது.. மேலும் இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது.

Maha

Next Post

கர்நாடகாவில் இரு சமூகத்தினரிடையே மோதல்.. 2 பேர் பலி.. 144 தடை அமல்..

Thu Aug 11 , 2022
கர்நாடகாவில் இரு சமுகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் உயிரிழந்தனர்.. கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஹுலிஹைடர் கிராமத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.. தகவலறிந்த காவல்துறையின் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து இதையடுத்து உள்ளூர் நிர்வாகம் அப்பகுதியில் 144 தடை விதித்துள்ளது. காவல்துறையினர் மோதலுக்கான காரணம் விசாரணை நடத்தி […]

You May Like