ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், அர்ஜூன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், திரைப்படம் நேற்று (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியானது. மங்காத்தாவிற்கு பிறகு எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் படம் எடுத்துள்ளனர் என்று நெட்டிசன்கள் பலரும் போஸ்ட் செய்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கு முன்பு வெளியான அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் முதல் நாளில் ரூ.31 கோடி வசூலித்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படம் நேற்று ஒரே நாளில் ரூ.30 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் கோட் படத்தை குட் பேட் அக்லியால் நெருங்க முடியவில்லை. கோட் திரைப்படம் உலகளவில் ரூ.126 கோடி வசூலித்து இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் அப்படம் சுமார் 35 கோடிக்கு மேல் வசூலை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், “கதையின் முக்கால்வாசியை வாய்ஸ் ஓவரில் சொல்லிவிடுகிறார்கள். மீதி ஓரிரண்டு காட்சிகள் மட்டும் விஷுவலில் காட்டுகிறார்கள். படத்தில் நான்கு காட்சிகள் எக்ஸ்ட்ரா உள்ளது. அள்ளவுதான் படமே. கதையில் எந்த ஒரு உயிரும் இருக்காது. படத்தில் வருபவர்கள், போகிறவர்கள் எல்லாம் பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முருகரைப் பார்த்ததும் ஔவையார் பாடியதைப் போல பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா என அஜித் வீட்டு வாசலில் பாடிவிட்டு, பரிசு கிடைத்தால் வாங்கிட்டு போங்க. அதை விட்டுவிட்டு ஃபேன் பாய் என்று எங்க தாலியை ஏன் அறுக்குறீங்க..?
படம் முழுக்க பழைய பாட்டை போட்டு சாகடித்து விட்டார்கள். அதுவும் முழு முழு பாடல்கள் போட்டுவிட்டார்கள். படம் ஆரம்பித்து கொஞ்ச நேரத்திலேயே தெரிந்துவிட்டது, இந்த படம் விளங்காது என்று. யோகி பாபு வந்ததும் 10-வது பொருத்தமும் சரியாக பொருந்தி விட்டது. இதற்கிடையே, ட்விட்டரைப் பார்த்தால், விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் செம காமெடி போய்க்கொண்டு இருக்கிறது. மொத்தத்தில் இந்த படம் ரிலீஸுக்கு முன்னாள், புரோமோசனில் இந்த படம் வேற லெவலில் இருக்கப்போகுது, ஃபேன் பாய் சம்பவம் என்றெல்லாம் கூறினார்கள்.
ஆனால், இந்தப் படத்தில் எல்லாமே பழசா இருக்கு. படத்தின் டைட்டில் பழசு, த்ரிஷா, சிம்ரன், டினு ஆனந்த், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட அனைவருமே பழசு. அர்ஜுன் தாஸ் மட்டும் தான் புதிதாக தெரிகிறார். படத்துக்குள் 10 பழைய பாட்டை தூக்கி உள்ளே வைத்துள்ளார்கள். பல பழசை ஒன்றாக இணைத்து புதுசா ஒரு பழைய படத்தை எடுத்து வைத்துள்ளார்கள்” என்று விமர்சித்துள்ளார்.
Read More : ’விஜய் படத்தை நெருங்க கூட முடியல’..!! ’குட் பேட் அக்லி’ படத்தின் முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?