fbpx

தயாராகி வரும் அடர் மேக கூட்டங்கள்..!! 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் தீவிர மழைக்கு வாய்ப்பு..!! பிரதீப் ஜான் பரபரபு தகவல்..!!

தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை முதல் தீவிர மழை இருக்கும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாமல், வலுவிழந்து நாளை (சனிக்கிழமை) கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு முதலே மழை வெளுத்து வாங்கியது.

இந்நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருவதாக கூறியுள்ளார். பிற்பகலுக்கு மேல் மாலை அல்லது இரவில் மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை முதல் தீவிர மழை இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்த 4 மாவட்டங்களிலும் நாளைய தினம் மழையளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார். தீவிர மழைப் பொழியை கொடுக்கக் கூடிய அடர் மேகக் கூட்டங்களும் உருவாகி வருவதாக பிரதீப் ஜான் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Read More ; வன்முறையை தூண்டும் சீமானின் பேச்சு..!! வழக்கை விரைந்த விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு..!!

English Summary

Pradeep John has said that there will be very heavy to intense rain in 4 districts of Tamil Nadu today and tomorrow.

Chella

Next Post

மனைவியை அருகில் வைத்துக் கொண்டே மருமகள் மீது பாய்ந்த மாமனார்..!! நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!! எடப்பாடியில் அதிர்ச்சி..!!

Fri Nov 29 , 2024
The shocking incident of a father-in-law raping his sleeping daughter-in-law near Edappadi has left many shocked.

You May Like