fbpx

“நகையை திருடுனதுக்கு இப்படியாடா செய்வ” திருடனை கதிகலங்க செய்த போஸ்டர்..


திருடப்பட்ட நகைகளை கண்டுபிடிக்க பலர் பல விதமான முயற்சிகளை செய்வது உண்டு. ஆனால் ஈரோட்டில் ஒருவர் திருடுபோன தன் நகைகளை கண்டுபிடிக்க செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆம், ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோவிலை சேர்ந்தவர் ராமசாமி. கடந்த 15-ம் தேதி இவர் தனது வீட்டை பூட்டி, சாவியை வெளியிலேயே ஒரு இடத்தில் மறைவாக வைத்து விட்டு, தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். யாருக்கும் தெரியாமல் சாவியை மறைத்து வைக்கிறேன் என்று அவர் செய்ததை, யாரோ கவனித்து விட்டார்கள். ராமசாமி வெளியே சென்றதும் திருடன் வீட்டிற்க்குள் சென்று வீட்டினுள் இருந்த 18 பவுன் நகைகள் மற்றும் 3 ஆயிரம் ரூபாயையும் திருடி சென்றுள்ளான். ஊரில் இருந்து திரும்பி வந்த ராமசாமிக்கு பெரும் அதிர்ச்சி. உடனடியாக இது குறித்து அவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். எனினும் இதுவரை நகைகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ராமசாமி வினோத முயற்சியில் இறங்கினார். இதில் தனது தெருவின் முக்கில் ஒரு பேனரை வைத்துள்ளார். இந்த பேனரில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமசாமி வீட்டில் நகைகள் திருடுபோய் உள்ளது. வெள்ளாங்கோவிலை சேர்ந்த எவரும் நகைகளை எடுத்திருந்தால் திருப்பி வைத்து விடுங்கள், இல்லை என்றால் கோவிலில் கோழி குத்தி செய்வினை வைக்கப்படும். இதனால் எடுத்தவர்கள் குடும்பமே பாதிக்கப்படும். எனவே நகைகளை வைத்து விடுங்கள் என்று எழுதப்பட்டுள்ளது. திருடு போன நகைகளை மீட்க செய்வினை வைக்கப்படும் என்று வார்னிங் கொடுத்துள்ள சம்பவம் அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

Maha

Next Post

“அம்மா அப்பா வேணும்” கதறி அழும் பிஞ்சு குழந்தைகள்; பிள்ளைகளை தவிக்க விட்டுவிட்டு பெற்றோர் செய்த காரியம்..

Sun Sep 24 , 2023
கன்னியாகுமரி தட்டான்விளை பெருமாள் நகரில் வசித்து வருபவர் பிரவீன். மர வியாபாரம் செய்து வரும் இவருக்கு ரூபா என்ற மனைவியும், 3 வயதில் மகளும், 1½ வயதில் மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக பிரவீனுக்கு அவரது வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் நஷ்டத்தை ஈடுசெய்ய ரூ.20 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கி தனது தொழிலை விரிவு படுத்தியும் எந்த லாபமும் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் […]

You May Like