ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி மீதும், அவரின் மகன் மீதும், மருமகள் காவல்துறையில் புகாரளித்துள்ளார்..
தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான திலகவதியின் மகன் பிரபு திலக்… மருத்துவரான இவர் சில படங்களையும் தயாரித்துள்ளார்.. கடந்த 2007-ம் ஆண்டு ஸ்ருதி என்ற பெண்ணை பிரபு திருமணம் செய்து கொண்டார்.. இந்த தம்பதிக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஸ்ருதி மீது திலகவதி குடும்பத்தினரும், கணவர் மாமியார் மீது ஸ்ருதியும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்..

அதாவது பிரபுவுக்கு பல பெண்களுடன் பல பெண்களுடன் தொடர்புள்ளதாகவும், தன்னை அவர் கொடுமைப்படுத்தியதாகவும் மேலும் சேலம் மாநகரக காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஸ்ருதி புகார் அளித்துள்ளார்.. மேலும் தனது திருமணத்திற்காக தனது தந்தை வழங்கிய 170 சவரன் நகை மற்றும் 1 கோடி ரூபாய் பணத்தையும் வழங்கியதாகவும் அதனையும் அவர்கள் எடுத்துக்கொண்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் திலகவதி தரப்பில் கூறப்படும் தகவல்கள் வேறுவிதமாக உள்ளது.. திலகவதியின் 70-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.. இதற்காக அவரின் மகன் ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் ஸ்ருதி சனிக்கிழமை நள்ளிரவு தனது குழந்தைகளுடன், 5 சூட்கேஸ்களுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாரம்.. அடுத்தநாள் காலை தனது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லை என்பதை அறிந்த பிரபு திலக், உடனடியாக ஸ்ருதிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.. பின்னர் தொடர்ந்து முயற்சித்து வந்த நிலையில் ஒருவழியாக போனை எடுத்த போது, அவர் சரியாக பேசவில்லையாம்…
மேலும் திலகவதியின் 70-வது பிறந்தநாள் விழாவை கெடுப்பதற்காகவே திட்டமிட்டு நேற்று முன் தினம் புகார் கொடுத்தாராம்.. தன்னுடைய நகைகள் மட்டுமின்றி திலகவதியின் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த பணத்தை ஸ்ருதி எடுத்துகொண்டு சென்று விட்டாராம்..
குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்ககூடாது என்று திலகவதி தரப்பினர் அமைதியாக இருப்பதாகவும், அவரின் மருமகள் கொடுத்த பேட்டியால் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.. இப்படி திலகவதியும், அவரின் மருமகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டியதும், காவல்நிலையத்தில் மருமகள் புகார் அளித்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..