fbpx

விஜய் கொடுத்த திருக்குறள் புத்தகம்.. ஆளுநர் கொடுத்த பாரதியார் கவிதைகள்..!! முதல் சந்திப்பில் மாறி மாறி பரிசளிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து த.வெ.க தலைவர் விஜய் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு வழங்கியுள்ளார். மாணவி வன்கொடுமை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கியதில் இருந்து ஆளுநரை சந்தித்தது இதுவே முதல் முறையாகும். 30 நிமிடம் நடந்த இந்த சந்திப்பில், ஆளுநர் ரவிக்கு தவெக தலைவர் விஜய் திருக்குறள் புத்தகத்தை பரிசளித்தார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…’ என்ற திருக்குறளின் வரிகளை கட்சியின் கொள்கையாக அறிவித்த விஜய், தனக்கு மிகவும் பிடித்த புத்தகமான திருக்குறளை ஆளுநருக்கு பரிசளித்தார். அதனைத்தொடர்ந்து ஆளுநர் ரவி பாரதியார் கவிதை புத்தகத்தை விஜய்க்கு பரிசாக வழங்கினார்.

Read more ; ”தமிழக பாஜக என்னை புறக்கணிக்கிறது”..!! அண்ணாமலை மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்த குஷ்பு..!!

English Summary

Thirukkural book given by Vijay.. Bharatiyar poems given by the governor

Next Post

விஜய் - ஆளுநர் சந்திப்பை வரவேற்ற அண்ணாமலை..!! அனைத்து கட்சியினரும் போராட முன்வர அழைப்பு..!!

Mon Dec 30 , 2024
Tamil Nadu BJP leader Annamalai has called on all parties to come forward to protest the rape of a student at Anna University in Chennai.

You May Like