fbpx

திருவள்ளூர் மாணவி தற்கொலை.. சிபிசிஐடி விசாரணை தொடக்கம்…

தமிழகத்தில் பள்ளி மாணவிகள் தற்கொலை என்பது தொடர் கதையாகி வருகிறது.. கடந்த 13-ம் தேதி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் குறித்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மற்றொரு பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார்.. திருவள்ளூர் அருகில் உள்ள கீழச்சேரி ஊராட்சியில் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த மாணவி, கீழச்சேரியில் செயல்படும் ஒரு அரசு உதவிபெறும் பள்ளி ஹாஸ்டலில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது பற்றி பள்ளி நிர்வாகம் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி மாணவியின் உறவினர்கள் கீழச்சேரி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உயர்நீதிமன்ற அறிவுறத்தலின் பேரில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.. விசாரணை அதிகாரியாக திரிபுர சுந்தரி தலைமையிலான குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.. அதன்படி உயிரிழந்த மாணவி அப்டித்த பள்ளி, மற்றும் தங்கியிருந்த விடுதியில் விசாரணை நடைபெற்று வருகிறது..

Maha

Next Post

அதிமுகவுக்கு புதிய இணை ஒருங்கிணைப்பாளர் நியமனம்..! மேலும் 10 பேர் நீக்கம்..! புதிய அறிவிப்பை வெளியிட்ட ஓபிஎஸ்..!

Mon Jul 25 , 2022
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதிமுகவின் இணை, துணை ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.வைத்திலிங்கம், இன்று முதல் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் வைத்திலிங்கத்தை நியமித்து ஓபிஎஸ் அறிவித்துள்ளார். மேலும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களாக 3 பேரை நியமனம் செய்து ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, கு.ப.கிருஷ்ணன், […]
புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார் ஓபிஎஸ்..? அடிமேல் அடி விழுந்ததால் பயங்கர அப்செட்..!!

You May Like