பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்த உடனேயே ஒருவருக்கு முக்தியை வழங்கிடும் முக்தி தலமாக விளங்குவது திருவண்ணாமலை. இங்கு சிவ பெருமான் மலையின் வடிவமாக காட்சி தருவதாக கூறப்படுகிறது. அதனால் தான் வேறு எங்கும் நடக்காத சிறப்பாக வருடந்தோறும் திருக்கார்த்திகை தீபத்தன்று மலை உச்சியில் தீபம் ஏற்றும் நிகழ்வு நடத்தப்படுகிறது. உண்மையான பக்தியை தவிர வேறு எவற்றாலும் அணுக முடியாத அண்ணாமலையாரை சிவ பெருமான் இங்கு மலையின் வடிவமாக அருள் செய்வதால், இங்கு மலையை வலம் வந்து வழிபடும் கிரிவல வழிபாடு தோன்றியது.
கடந்த வாரம் திருவண்ணாமலையை தாக்கிய ஃபெஞ்சல் புயலாலும், ஏற்பட்ட மூன்று மண் சரிவாலும், இன்று மலை உச்சியில் மகா தீபத்தை ஏற்ற அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக மலை உச்சிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் இன்னும் அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை பொருத்தவரை கிரிவலம், சாமி தரிசனம் மட்டுமின்றி சித்தர்கள் வாழும் இடமாக நம்பப்படுவதால், சித்தர்களை தரிசிக்க முடியும் என பெரும்பாலான பக்தர்கள் திருவண்ணாமலை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். கர்நாடகாவிலும் அங்கிருக்கும் சைவ மடங்களின் வழியே திருவண்ணாமலையின் பெருமைகள் அறிந்து கூட்டம் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலைக்கு பக்தர்களை தங்களது சொந்த செலவில் கொண்டு வருபவர்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருப்பதால், அதன் மூலமும் கூட்டம் நிரம்பி அதிகரித்து வருவதாக ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர்.
Read more ; மழைக்காலத்தில் ஊறுகாயில் பூஞ்சை ஏற்படுகிறதா? பூஞ்சையில் இருந்து ஊறுகாயை பாதுகாக்க டிப்ஸ் இதோ..