fbpx

’இந்த நடிகரோட அப்பா என்கிட்ட அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டாரு’..!! ’பணம் வாங்கிட்டேன்’..!! ஷகிலா சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

மலையாள சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. 1990-களில் இவர் நடித்த கவர்ச்சி படங்கள் கேரளாவில் ஹிட் அடித்தது. பின்னர் ஆபாசப் படங்களில் நடிப்பதை தவிர்த்து, திரைப்படங்களில் அவ்வப்போது காமெடி வேடங்களில் நடித்து வந்தார். இதையடுத்து, கடந்தாண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனக்குள் இருக்கும் சமையல் திறமையை வெளிப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியால், ஷகிலாவின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும், அண்மையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஷகிலா பங்கேற்றிருந்தார். ஆனால், சென்ற வேகத்தில் வெளியேறி விட்டார். இந்நிலையில், பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஷகிலா, தன்னை அட்ஜஸ்ட்மெண்ட்க்கு அழைத்த நடிகர் குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், ”தெலுங்கு நடிகர் அல்லரி நரேஷின் அப்பா, இயக்குநர் சத்யநாராயணா என்னை அட்ஜஸ்ட்மெண்ட்க்கு கூப்பிட்டார். அடுத்த படத்தில் எனக்கு வாய்ப்பு தரேன்னு சொன்னார். நான் அப்போ அவரிடம் சொன்னேன் “சார் நான் இந்த படத்துக்கு சம்பளம் வாங்கிட்டேன். அடுத்த படத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்ல. எனக்கு அவசியமும் இல்ல. எதுக்கு என்னை இப்படி கூப்பிட்டீங்கன்னு கேட்டேன். ஏன்னா நான் அந்தமாரி பண்ணாதே கிடையாது. எனக்கு அதுக்கு அவசியமும் வந்ததில்ல” என்று ஷகிலா பேசியுள்ளார்.

Chella

Next Post

கொரோனா காலத்தில் இருந்ததை போல தயாராக இருக்க வேண்டும்!… மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை!

Mon Nov 27 , 2023
மாநில அரசுகள் கொரோனா காலத்தில் இருந்ததை போல தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்டை நாடான சீனாவில் தற்போது எச்9என்2 எனும் சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் நிமோனியா வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக வடக்கு சீனாவில் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகள் இந்த வகை காய்ச்சலால் எளிதாக தாக்கப்படுகின்றனர். இந்நிலையில் எச்9என்2 வகை நிமோனியா காய்ச்சல் பரவல் குறித்து […]

You May Like