fbpx

அண்ணாமலைக்கு களங்கம் ஏற்படுத்தவே இந்த ஆடியோ பறப்ப பட்டது – திருச்சி சூர்யா சிவா

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன்தான் சூர்யா சிவா. இவர், திமுகவில் பதவி கிடைக்காததால், அங்கிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்து கொண்டார். மேலும் அண்ணாமலைக்கு மிகவும் நெருங்கிய நபராக தன்னை மாற்றிக் கொண்டார். திமுகவில் தான் எந்த ஒரு பதவியும் கிடைக்கவில்லை, பாஜகவில் ஏதேனும் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தார்.

அந்த வகையில் சிறுபான்மையினர் தலைவராக இவருக்கு பதவி கொடுப்பார்கள் என்று பலரும் எண்ணினர். ஆனால் சிறுபான்மையினர் அணி தலைவராக டெய்சி சரணை தேர்வு செய்தனர். சூர்யா சிவாவிற்கு ஓபிசி அணியில் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் இருவரும் சரமாரியாக தகாத வார்த்தைகளால் பேசி சண்டை போட்டுக் கொள்ளும் ஆடியோவானது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, இது குறித்து விசாரணை மேர்கொள்ளப்படும், தவறு யார் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில் ஆடியோ விவகாரம் தொடர்பாக திருப்பூர் பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில் திருச்சி சூர்யா மற்றும் டெய்சி ஆகியோரிடம் பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்துள்ளது. இதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சூர்யா, “பாஜக சித்தாந்தத்தால் ஈடுபட்டு வந்துள்ளோம், எதிர்கட்சிகளுக்கு அவல் கிடைத்ததுபோல பரப்பி வருகின்றனர். எங்களுக்கிடையில் பரஸ்பரம் பேசி சுமூகமாக முடித்துக்கொண்டோம், நாங்கள் இருவரும் ஆடியோவை வெளியிடவில்லை என்றுஎழுத்துப்பூர்வமாக அறிக்கை அளித்துள்ளேண். இந்த ஆடியோ விவகாரம் எண்கள் மீது “கண்பட்டு விட்டதுபோல நடந்துவிட்டது” என்று கூறினார்.

மேலும் பேசிய திருச்சி சூர்யா அண்ணாமலைக்கு, களங்கம் ஏற்படுத்தவே இந்த ஆடியோவை பரப்பி வருகின்றனர். இதனை ஊடகங்கள் எதுவும் பெரிதுபடுத்த வேண்டாம், நானும் பாஜக சிறுபான்மை பிரிவு மாநிலத்தலைவர் டெய்சயும் குடும்பரீதியிலான நட்புறவுடன்தான் இருக்கிறோம், சின்ன அசம்பாவிதம்தான். ஆனால் இனி இதுபோல நடக்காது, திமுகவின் சைதை சாதீக் போண்றவர்கள் பேசியதற்கு கட்சி ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் பாஜகவில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தவறு எனும் பட்சத்தில் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன், எனக் கூறினார்.

Kathir

Next Post

திருச்சி சூர்யா சிவா, கட்சி பொறுப்பிலிருந்து அதிரடி நீக்கம்!!! இனி தொண்டனாக செயல்படலாம் - அண்ணாமலை அறிக்கை...

Thu Nov 24 , 2022
திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன்தான் சூர்யா சிவா. இவர், திமுகவில் பதவி கிடைக்காததால், அங்கிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்து கொண்டார். மேலும் அண்ணாமலைக்கு மிகவும் நெருங்கிய நபராக தன்னை மாற்றிக் கொண்டார். திமுகவில் தான் எந்த ஒரு பதவியும் கிடைக்கவில்லை, பாஜகவில் ஏதேனும் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தார். அந்த வகையில் சிறுபான்மையினர் தலைவராக இவருக்க பதவி கொடுப்பார்கள் என்று பலரும் எண்ணினர். ஆனால் சிறுபான்மையினர் அணி தலைவராக […]

You May Like