fbpx

இப்படியும் சாதிக்கலாம்!… உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்த சிறுமி!… 18 கிலோ எடை குறைந்த அவலம்!

ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், தொடர்ந்து 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை செய்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரிஷா. இந்த சிறுமி ஆரம்பத்தில் தொடர்ந்து 16 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்ட நிலையில், 16 நாட்கள் முடிவடைந்த பின்னரும் கூட சிறுமியின் உடலில் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாததால், தனது ஆன்மிக குருவின் அனுமதி பெற்று தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து 110 நாட்கள் நீட்டித்தார். இந்த 110 நாட்களிலும் சிறுமி கிரிஷா காலை 9 மணி முதல் மாலை ஆறு முப்பது மணி வரை வெறும் காய்ச்சிய தண்ணீரை மட்டுமே பருகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொடர்ந்து தனது 110 நாட்கள் உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக முடித்துள்ள கிரிஷா, உண்ணாவிரத காலம் முடிவடைந்ததும், தனது எடையில் 18 கிலோ குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கிய கிரிஷா 110 நாட்கள் உண்ணாவிரதத்தை முடித்து விட்டு தனது ஆன்மிக குருவிடம் ஆசி பெற்று கொண்டார். பதினோராம் வகுப்பு படிக்கும் கிரிஷா உண்ணாவிரதத்தின் போது மத நூல்களைப் படித்து வந்தும், பிரார்த்தனைகளிலும் தனது கவனத்தை செலுத்தி இருந்துள்ளார். மன ஒருமைப்பாட்டுடன் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை தனது உண்ணாவிரதம் எடுத்துக்காட்டி உள்ளதாக கிரிஷா, செய்தியாளர்களிடம் கூறினார்.

Kokila

Next Post

தன் இனத்தையே உண்ணும் விலங்குகள்!… வியப்பூட்டும் நரமாமிச சடங்குகள்!

Wed Nov 1 , 2023
மனிதகுல வரலாற்றில் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் நரமாமிசம் இல்லாமல் இருப்பதற்கு ஒரு உயிரியல் காரணம் உள்ளது. சக மனிதர்களை உண்பது நோயை ஏற்படுத்தும். சக மனிதனின் மூளையை உண்ணும்போது மாடுகளுக்கு வரும் Mad Cow போன்றதொரு நோயை ஏற்படுத்தும். இது நமது மூளையை தாக்கி உடலை நடுங்க வைத்து இறுதியில் இறந்து போக வைக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு மேலே தென்மேற்கு பசிபிக் கடலில் தீவுகளாய் இருக்கும் பப்புவா நியூ கினியாவில் உள்ள […]

You May Like