தமிழ்நாட்டில் இனி கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு வழங்கும் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு, கட்டிட நிறைவு சான்றிதழ் பெற வேண்டுமென்றால், வரைபடத்தில் உள்ள அளவில்தான் கட்டிடம் கட்டியிருக்க வேண்டும். அதில் விதிமீறல்கள் இருந்தால் பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்படாது. எனவே, கட்டிடம் கட்டுபவர்கள் விதிகளை கடைபிடித்து வந்தனர். இதனால், தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட அளவுள்ள கட்டிடங்களுக்கு இனி பணி நிறைவு சான்றிதழ் வேண்டாம் என்று அறிவித்துள்ளது.
அதன்படி, 14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள், 750 சதுர மீட்டர் பரப்பளவிற்கு உட்பட வீடு, 14 மீட்டர் உயர் மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவிற்கு உட்பட்ட வணிக கட்டிடங்கள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்சார வாரியமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னர் வணிக கட்டிடங்கள் எந்த அளவாக இருந்தாலும் கட்டிட பணி நிறைவு சான்றிதழ் கட்டாயம் இருந்தால்தான் மின் இணைப்பு வழங்கப்படும் என்ற நிலை இருந்து வந்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒருபுறம் வரவேற்பு இருந்தாலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால், கட்டிடம் கட்டுபவர்கள் விதிகளை மீறினால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. கட்டிட நிறைவு சான்றிதழ் வழங்கினால்தான் மின் இணைப்பு என்ற சூழ்நிலை இருந்தால் விதிகளை மீறுவதற்கு அச்சப்பட்டனர். ஆனால், இப்போது அதிலும் விதி விலக்கு வழங்கி இருப்பதால் விதிமீறல் கட்டிடங்கள் அதிகரிக்கும்” என்று கூறுகின்றனர்.
Read More : தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்கிறதா..? தனியாருக்கு போகும் மின்சாரத்துறை..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!