இந்தியாவில் உள்ள 19 பெருநகரங்களில், கொல்கத்தாவில் தான் கடந்த ஆண்டு மிகக் குறைவான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கையிக் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் 11 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் டெல்லியில் 1,226 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன – இது நாட்டிலேயே மிக அதிக எண்ணிக்கையாகும்..
டெல்லியைத் தொடர்ந்து ஜெய்ப்பூரில் 502 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், மும்பையில் 364 பாலியல் வன்கொடுமை வழக்குகளும் ஐபிசி பிரிவு 376ன் கீழ் பதிவாகியுள்ளன. கொல்கத்தாவை போல தமிழகத்தின் கோவை நகரிலும் குறைவான எண்ணிக்கையில் பாலியல் வ்ன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.. கோவையில் 12 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன.. பீகார் தலைநகர் பாட்னாவில் 30 பாலியல் வன்கொடுமைவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன..
மற்ற பெருநகரங்களில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் 165 வழக்குகளும், பெங்களூரில் 117 வழக்குகளும், ஹைதராபாத்தில் 116 வழக்குகளும், மகாராஷ்டிராவின் நாக்பூரில் 115 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இந்த 19 நகரங்களில் 2021 ஆம் ஆண்டில் 3,208 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன என்று என்சிஆர்பி தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் அதிகபட்சமாக 6,337 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன, நாகாலாந்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் நான்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் 1,123 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தத்தில், இந்தியாவில் கடந்த ஆண்டு மொத்தம் 31,677 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன, இதில் 31,878 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.