fbpx

ப்ளூடிக் இல்லாதவர்களுக்கு இந்த அம்சம் இனிமேல் கிடைக்காது!… ட்விட்டர் அதிரடி அறிவிப்பு!

ட்விட்டர், ப்ளூடிக் உள்ள பயனர்கள் தங்களை பின் தொடராமல் இருப்பவர்களுக்கு நேரடியாக செய்திகளை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து புதுப்புது மாற்றங்களை செய்து பயணங்களை முறைப்படி வைத்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது, ட்விட்டர் இந்த வாரத்தில் ஒரு புதிய அப்டேட்டை வெளியிடும் என்று கூறியுள்ளார். அது என்னவென்றால், ப்ளூடிக் உள்ள பயனர்கள் மட்டுமே தங்களை பின் தொடராமல் இருப்பவர்களுக்கு நேரடியாக செய்திகளை அனுப்ப முடியும். ப்ளூடிக் இல்லாதவர்கள் தங்களை பின் தொடராமல் இருப்பவர்களுக்கு நேரடியாக செய்திகளை அனுப்ப முடியாது.

ஒரு பயனர் எனது டிஎம் (DM) முழுவதும் ஸ்பேம் செய்திகளாக உள்ளன. இவ்வளவு மோசமாக இருந்ததில்லை. என்று கூறியுள்ளார். அதற்கு உங்கள் டிஎம் ஸ்பேம் வரவிருக்கும் வாரங்களில் கணிசமாகக் குறையும். என்று T(w)itter Daily News என்ற கணக்கு பதிலளித்துள்ளது. இந்த இரண்டு ட்வீட்களுக்கும் பதிலளித்த எலான் மஸ்க், இந்த வாரம் புதுப்பிப்பு வெளியிடப்படும் என்று நம்புகிறேன். நான் பலமுறை கூறியது போல, ஏஐ (AI) போட்களை வேறுபடுத்துவது கடினமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Kokila

Next Post

இந்தியாவின் முதல் கோடீஸ்வரர் மீர் உஸ்மான் அலி கான்!... முகேஷ் அம்பானி, ரத்தன் டாடாவை விட பன் மடங்கு சொத்து!... சிறப்பு தொகுப்பு இதோ!

Tue Jun 13 , 2023
1911 முதல் 1948 வரை 37 ஆண்டுகள் ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம் மீர் உஸ்மான் அலி கான், சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் முதல் கோடீஸ்வரர் ஆவார். இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் யார் என்று கேட்டால், டாடாக்கள், பிர்லாக்கள் போன்ற தொழிலதிபர்களின் பெயர்கள்தான் நமக்கு நினைவுக்கு வரும். உலகளவில் பெரிய பணக்காரர் யார், இந்தியளவில் பெரிய பணக்காரர் யார் என்பது குறித்து பலரும் தெரிந்து வைத்திருக்கிறோம். இப்போதுதான் மிகப்பெரிய பணக்காரர்கள் […]

You May Like