fbpx

”இது என்னடா புது உருட்டா இருக்கு”..!! பணம் வந்துருச்சு ஓவர் ஓவர்..!! கள்ளக்காதலர்களுடன் ஓட்டம் பிடித்த 4 பெண்கள்..!!

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு கட்டிக்கொள்ள ஏழைகளுக்கு மத்திய அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு ரூ.2.5 லட்சம் வழங்கப்படும். முதலில் ரூ.50 ஆயிரம் தரப்படும். அந்த பணத்தை கொண்டு கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும். அதை அதிகாரிகள் சரிபார்த்த பிறகு, அடுத்த தவணையாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். அதன் பின்னர் கடைசி தவணையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இது நம் அனைவருக்கும் இது தெரிந்திருக்கும். ஏனெனில், இத்திட்டத்தின் கீழ் ஏராளமானோர் பயனடைந்து வீடு கட்டியுள்ளனர். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் இத்திட்டத்தில் நடந்த மோசடி ஒன்று அதிகாரிகள் அனைவரையும் திக்குமுக்காட வைத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் 4 பேருக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முதல் தவணைத் தொகையாக தலா ரூ.50,000 வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் கட்டுமான பணிகள் ஏதும் தொடங்கவில்லை. இவர்கள் 4 பேரும் தங்களின் மனைவி பெயரில் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பித்திருந்தனர். இதனால், திட்டத்தின் அலுவலர் சுரப் திரிபாதி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீசிற்கு சம்பந்தப்பட்ட 4 மனைவிகளின் கணவர்களும் அளித்த பதில்தான் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. முதல் தவணை பணம் ரூ.50,000 இவர்களின் மனைவியின் வங்கிக் கணக்கிற்கு சென்றுள்ளது. பணம் வந்து சேர்ந்ததும் இந்த 4 பேரின் மனைவிகளும் அவரவர்களின் கள்ளக் காதலர்களுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டதாகவும், இதனால் தாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், அடுத்த தவணையை தப்பித் தவறி கூட அதே வங்கிக் கணக்கிற்கு அனுப்ப வேண்டாம் எனவும் அந்த அதிகாரியிடம் இந்த ஆண்கள் கோரியுள்ளனர். இவர்களின் புகாரை கேட்டு அதிர்ச்சி அடைந்த அலுவலர் சுராப் திரிபாதி, பறிபோன பணத்தை எப்படி மீட்பது என்ற தீவிரமாக யோசித்து வருகிறார். அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

4 பெண்களை ஏமாற்றி அடிக்கடி உடலுறவு..!! விதவைகளை குறிவைத்து கும்மியடித்த காவலர்..!! சிக்கியது எப்படி..?

Fri Feb 10 , 2023
விதவைப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு, ரூ.7.50 லட்சம் பணத்தையும் ஏமாற்றிய காவலர் கைது செய்யப்பட்டார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த கீழசுப்பராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுதா (39). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது இரண்டு குழந்தைகளை வளர்ப்பதற்காக காய்கறி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த கடையின் ரெகுலர் கஸ்டமர் குணசேகரன் (42). இவர் காரைக்கால் காவல் நிலையத்தில் காவலராக […]

You May Like