fbpx

அஜித்தின் ஒரே ஆசை இதுதானாம்.. பிரபலம் சொன்ன தகவல்! என்னனு தெரியுமா?

அஜித் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அஜித்தின் தீராத ஆசை பற்றி ரங்கராஜ் பாண்டே பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும் திரைபிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அஜித்தை பற்றி மற்ற பிரபலங்கள் பேசும் விஷயங்களையும் அஜித்தின் பழைய பேட்டியையும் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். அந்த வகையில் ரங்கராஜ் பாண்டே அஜித்தை பற்றி பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகின்றது.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்து நடித்தார் ரங்கராஜ் பாண்டே. அப்போது அஜித்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்நிலையில் ஒரு பேட்டியில் அஜித்திற்கு இருக்கும் ஒரே ஆசை என்ன என்பது பற்றி பேசியுள்ளார் ரங்கராஜ் பாண்டே.. அதாவது அஜித்திற்கு ஸ்போர்ட்ஸ் மீது அதிக ஆர்வம் இருக்கின்றதாம். ஸ்போர்ட்ஸ் தான் ஒரு ம்னிதனை நன்கு வழிநடத்தும் என நம்பக்கூடியவர் தான் அஜித்.

ஸ்போர்ட்ஸ் ஒழுக்கத்தையும், வாழ்க்கையை எப்படி கையாளவேண்டும் என்பதையும் உணர்த்தும். எனவே தன் ரசிகர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு விளையாட்டை விளையாட வேண்டும், ஸ்போர்ட்ஸ் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் அஜித்தின் ஆசையாக இருக்கின்றது என்றார் ரங்கராஜ் பாண்டே.

அதுமட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ஸ்போர்ட்ஸ் அகாடமி துவங்கவேண்டும் என்பது தான் அஜித்தின் தீராத ஆசையாக இருக்கின்றது என்றார் ரங்கராஜ் பாண்டே. இந்த வீடியோ தற்போது அஜித் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

பிரபல இளம் நடிகையுடன் ஹனிமூன் சென்ற நடிகர் ஜெய்..!! வைரலாகும் புகைப்படம்..!!

Wed May 1 , 2024
இளம் நடிகை பிரக்யா நாக்ரா கழுத்தில் தாலியோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, புது வாழ்க்கை ஆரம்பம் என நடிகர் ஜெய் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைத்துள்ளார். கோலிவுட் திரையுலகில், தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஜெய். தன்னுடைய முதல் படத்திலேயே, தளபதி விஜய்க்கு தம்பியாக ‘பகவதி’ படத்தில் நடித்தார். இந்த படம் வந்த போது, ஜெய் ஒரு ஜாடையில் பார்க்க விஜய் போலவே இருப்பதாக […]

You May Like