fbpx

கெட்ட கொழுப்புகளை கரைக்க இது ஒன்னு போதும்!… சாப்பிடுவதற்கு முன் இதை குடியுங்கள்!… சூப்பரான எளிய ரெசிபி!

நமது உடலில் தேங்கும் கெட்ட கொழுப்புகளைக் கரைக்கும் உணவுகள் மற்றும் பானங்களை அவ்வப்போது குடித்து வர வேண்டும். இந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்பது குறித்து இதில் காண்போம்.

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைக்கும் பல உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் உள்ளன. அதில் இஞ்சி, பூண்டு மற்றும் எலுமிச்சை சாற்றினைக் கொண்டு தயாரிக்கும் பானம் மிகவும் சிறப்பான பலனைத் தரும். ஏனெனில் இந்த மூன்று உணவுப் பொருட்களுமே கொலஸ்ட்ராலை திறம்பட கரைக்கும் சக்தி கொண்டவை. அந்தவகையில் இந்த பானத்தை தயாரிக்கும் முறை குறித்து பார்க்கலாம். பானம் தயாரிக்கத் தேவையான பொருட்கள்: பூண்டு – 4 பற்கள், இஞ்சி – 3 இன்ச் துண்டு, எலுமிச்சை – 3 (பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்), தண்ணீர் – 5 கப்.

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் 5 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். பின் அதில் 3 இன்ச் இஞ்சியை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு தட்டி பாத்திரத்தில் உள்ள நீரில் போட வேண்டும். பின்பு அதில் 4 பூண்டு பல்லை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, பின் இறக்க வேண்டும். பிறகு அதில் 3 எலுமிச்சையின் சாற்றினைப் பிழிந்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து, வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள், அத்துடன் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பானத்தை மதியம் அல்லது இரவு உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஆனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், இந்த பானத்தை மட்டும் குடித்து வந்தால் போதாது. அத்துடன் ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி மற்றும் சமநிலையான வாழ்க்கை முறையையும் மேற்கொண்டு வந்தால் மட்டுமே, இந்த பானத்தின் பலனை முழுமையாக பெற முடியும்.

Kokila

Next Post

பெண்களுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கும் வாகனப்புகை!... எலும்புகள் விரைவில் தேய்மானம் அடையும்!... அமெரிக்க ஆய்வில் அதிர்ச்சி!

Mon Mar 13 , 2023
வாகனப்புகையால், வயது முதிா்ந்த பெண்களுக்கு விரைவில் எலும்பு தேய்மானம் அடையும் என நியூயார்க்கில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமொிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டனா். அந்த ஆய்வில் வாகனப்புகையில் இருக்கும் நைட்ரஜன் ஆக்ஸைடு, மற்ற வயது பெண்களை விட, மாதவிடாய் நின்ற வயது முதிா்ந்த பெண்களின் கீழ் முதுகுத் தண்டை இரண்டு மடங்கு அதிகமாக பாதிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனா். […]

You May Like