திருப்பதியில் வீடு கட்டுவதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த ஆற்று மணலை பசு ஒன்று சாப்பிட்டுக்கொண்டிருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் பசு ஒன்று மணலை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதனை பார்த்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்த அப்பகுதி மக்கள் ’கலியுகத்தில் இதுவும் சகஜம்’ என்று கருத்து தெரிவித்தனர். பசு மணலை சாப்பிடுமா என்று அவைகளை பராமரிக்கும் நபர்களிடம் கேட்டபோது, வயது முதிர்ந்த பசுக்கள் மணலை எப்போதாவது ஒருமுறை சாப்பிடும் என்று தெரிவித்தனர். பசுவின் உடலில் தாது சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டால், அதனை சரி செய்து கொள்வதற்காக பசுக்கள் மணலை சாப்பிடும் என்றும், பசுக்கள் தவிர ஒட்டகச்சிவிங்கி, மான் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும், இவ்வாறு செய்வது வழக்கம் என்றும் தெரிவித்தனர். மேலும், மணலை சாப்பிடுவதன் மூலம் பசுக்களுக்கு பாஸ்பரஸ் மற்றும் உப்பு ஆகிய சத்துக்கள் கிடைக்கிறது.