பொதுவாக கருப்பு கவுனி அரிசியில் பல்வேறு பயன்கள் உள்ள நிலையில், அதைவிட சிவப்பு அரிசியில் கூடுதல் மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள மருத்துவர் கார்த்திகேயன், “சிவப்பு அரிசியானது, பட்டை தீட்டப்படாதது. சிவப்பு அரிசியை அதன் மேல் தோலுடன் சாப்பிடும் போது நமக்கு மெக்னீஷியம், மேங்னீஸ், செலினியம் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துகள் கூடுதலாக கிடைக்கும். இது சிறுநீரகம், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
வெள்ளை அரிசியை பட்டை தீட்டும் போது, இந்த சத்துக்கள் அனைத்தும் நீங்கி விடுகிறது. மேலும், சிவப்பு அரிசியில் வைட்டமின் E அதிகம் இருக்கிறது. சிவப்பு அரிசியில் இருக்கும் மாவுச்சத்து, ரத்த சர்க்கரையின் அளவை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ளும். மேலும், இதிலிருக்கும் மினரல்கள்முடி, பற்கள், சருமம், எலும்பு, தசை, நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
அதேபோல், டைப் 2 டைபட்டிஸ் கொண்ட சர்க்கரை நோயாளிகளுக்கு சிவப்பு அரிசி மிகவும் ஏற்றதாக உள்ளது. மேலும், சிவப்பு அரிசியில் தோசை செய்து சாப்பிடும்போது, அதை சுவை மேலும் கூடும். இரண்டரை கப் சிவப்பு அரிசிக்கு, அரை கப் உளுந்து என்ற விகிதத்தில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், இந்த மாவை வழக்கம்போல் புளிக்க வைத்து தோசை செய்து சாப்பிடலாம். சாதாரண வெள்ளை அரிசியில் தோசை சுட்டு சாப்பிடுவதை விட, சிவப்பு அரிசியில் தோசை சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : ’இந்த லிஸ்ட் என் கைக்கு வந்தே ஆகணும்’..!! மாவட்ட செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு..!! மாஸ் காட்டும் விஜய்..!!