fbpx

ஐஸ்வர்யா ராய் மகளின் ஸ்கூல் பீஸ் இத்தனை லட்சமா????

தற்போது உள்ள காலகட்டத்தில் அநேகருக்கு இருக்கும் பெரிய செலவு, தங்கள் பிள்ளைகளின் ஸ்கூல் பீஸ் தான். ஆம், வெறும் abcd கற்றுக்கொடுக்கும் PRE.KGக்கு லட்ச கணக்கில் பீஸ் வாங்கும் பள்ளிக்கூடங்கள் உள்ளது. அளவுக்கு அதிகமான பீஸ் வாங்குகிறார்கள் என்று தெரிந்தும் பலர் தங்களின் பெருமைக்காக அந்த பள்ளியில் தான் தங்களின் பிள்ளைகளை சேர்த்து விடுகின்றனர். ஆம், தற்போது பள்ளியில் நன்கு பாடம் சொல்லி கொடுக்கப்படுகிறதா என்று பார்ப்பதை விட, அங்கு சேர்த்தல் தான் நமக்கு நல்ல அந்தஸ்து கிடைக்கும் என்று அதிக பணத்தை செலவிடுகின்றனர்.

அந்த வகையில், சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களே தங்களின் பிள்ளைகளுக்கு லட்சக்கணக்கில் பண செலவு செய்து தங்களின் பெருமைக்காக பெரிய பள்ளியில் சேர்த்து விடும்போது, சினிமா பிரபலங்கள் எல்லாம் தங்களின் பிள்ளைகளுக்கு எவ்வளவவு பீஸ் கட்டுவார்கள் என்று தெரியுமா?? வாருங்கள் பார்ப்போம்.. பாலிவுட் நட்சத்திரத் தம்பதி ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் மகளான ஆராத்யாவின் பள்ளிக் கட்டணம் தற்போது இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது…
ஆராத்யா படித்து வரும் மும்பையின் திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில், எல்கேஜி முதல் 7ம் வகுப்பு வரை 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே போல் 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 4 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் கட்டணம். மேலும், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கட்டணமாக 9 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது… இதே பள்ளியில் தான் ஷாருக்கான், சயீப் அலிகானின் குழந்தைகளும் படித்து வருகின்றனர். மேலும், கிரிக்கெட் வீரர் தோனியின் மகளான ஜீவா படிக்கும் பள்ளியில் 3ம் வகுப்பு வரை 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Maha

Next Post

’கட்டணம் வசூலிப்பது மட்டுமே உங்கள் குறிக்கோளா’..? உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் காட்டம்..!!

Fri Sep 29 , 2023
வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்வதை மட்டுமே சுங்கச்சாவடிகள் குறிக்கோளாக வைத்துள்ளன. சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கயத்தாறு, நாங்குநேரி இடையே தேசிய நெடுஞ்சாலையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஒரே இடத்தில் […]

You May Like