fbpx

இது என்ன கொடுமை!… கோவிலுக்குள் சென்ற இஸ்லாமிய பெண் எம்எல்ஏ!… கங்கை நீரால் கழுவிய மக்கள்!… உ.பி.யில் பரபரப்பு!

உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமிய பெண் எம்எல்ஏ கோயிலுக்கு வந்து சென்றதால் சிலர் கோயிலை கங்கை நீரால் சுத்தம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில் பத்ஹானி சாபா நகர் பஞ்சாயத்தில் சாமே மாதாகோயில் அமைந்துள்ளது . இந்த கோயிலில் ஞாயிறன்று நடந்த ஷட்சண்டி மகாயக்ஞம் நிகழ்ச்சிக்கு தூம்கரியாகஞ்ச் எம்எல்ஏவான இஸ்லாமியரான சயீதா காதூனுக்கு உள்ளூர் மக்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த அழைப்பை ஏற்று எம்எல்ஏ கோயிலுக்கு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்றார். இதனை தொடர்ந்து அவரது வருகையை விரும்பாத சிலர் கோயிலை மந்திரங்கள் முழங்க கங்கை நீரால் சுத்தம் செய்தனர். பஞ்சாயத்து தலைவர் தர்மராஜ் வர்மா கூறுகையில், “எம்எல்ஏ இஸ்லாமியர், அவர் மாட்டிறைச்சி சாப்பிடுபவர். அவரது வருகை இந்த புனிதமான இடத்தை தூய்மையற்றதாக்கிவிட்டது.

தற்போது தூய்மைபடுத்தப்பட்ட பிறகு இந்த இடம் வழிபாட்டிற்கு ஏற்றதாக மாறியுள்ளது” என்றார். இது குறித்து எம்எல்ஏ சயீதா கூறுகையில், “நான் மக்கள் பிரதிநிதி என்பதால் அனைத்து மதங்கள் மற்றும் பிரிவினரின் இடங்களுக்கு தொடர்ந்து செல்வேன். இதுபோன்ற செயல்களால் எங்களை தடுக்க முடியாது” என்றார்.

Kokila

Next Post

’இனி கூட்டுறவு வங்கிகளிலும் கல்விக்கடன்’..? அமைச்சர் பெரியகருப்பன் சொன்ன குட் நியூஸ்..!!

Wed Nov 29 , 2023
கூட்டுறவு வங்கிகளில் கல்விக்கடன் வழங்குவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் கூடுதல் பதிவாளர்கள் மற்றும் இணைப்பதிவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் கோபால், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் […]

You May Like