heat: தமிழகத்தில் நேற்று(மார்ச் 28) ஒரே நாளில், ஒன்பது நகரங்களில், வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது.
தமிழ்நாடு முழுவதும் கடுமையான வெப்பத்தை சந்தித்து வருகிறது. கடந்த பல நாட்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெப்பம் ஒருவரை சூடாக உணர வைப்பது மட்டுமல்லாமல், பல உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக வேலுாரில், 106 டிகிரி பாரன்ஹீட், சேலத்தில், 103 டிகிரி பாரன்ஹீட், கோவை, தர்மபுரி, ஈரோடு, மதுரை, திருப்பத்துார், திருச்சி, திருத்தணி ஆகிய நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதே நிலை அடுத்த சில நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளது.
இது தவிர திருத்தணி, திருச்சி, திருப்பத்தூர், தர்மபுரி 100 டிகிரி, சென்னை, கடலூர், புதுச்சேரி 99 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில்,கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதிகள் நிலை கொண்டுள்ளன. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவியது. அதன் தொடர்ச்சியாக இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவும்.மேலும், 30ம் தேதி வரையில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும். 31ம் தேதியும் ஏப்ரல் 1ம் தேதியும் வெப்பநிலை சற்று குறையும்.
Readmore: 2026-ல் கோவையில் 10 தொகுதியிலும் திமுக கூட்டணி… அடித்து சொல்லும் அமைச்சர் செந்தில் பாலாஜி…!