fbpx

கட்சித் தொடங்கி ஒரே வாரத்தில் இப்படியா?… விஜய்யின் மாஸ்டர் பிளான் என்ன?

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி உள்ளார். தற்போது நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் தெரிவித்திருந்தார். திரையுலகிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் தனது அறிக்கையின் வாயிலாக கூறியிருந்தார்.

அதனைதொடர்ந்து மாவட்ட வாரியாக கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தமிழக வெற்றி கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். விஜய் மக்கள் இயக்கமாக செயல்படும் போது, பில்லா ஜெகன் என்பவர் மாவட்ட தலைவராக இருந்தார். தற்போது அவர், திமுகவில் இணைந்து விட்டதால், தூத்துக்குடி மாவட்ட செயலாளராக எஸ்.ஜே.சுமன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நியமிக்கப்பட்டுள்ள எஸ்.ஜே.சுமன், பில்லா ஜெகனின் சகோதரர் ஆவார்.

Kokila

Next Post

மீனுடன் இந்த உணவை சேர்த்து சாப்பிட்டால் நுரையீரல் பாதிப்பு, மூச்சு விட கடினமாகும்…! முழு விவரம்..!

Sat Feb 10 , 2024
பொதுவாக நாம் வீட்டில் சமைத்து உண்ணும் உணவுகள் ஆரோக்கியமானதாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருந்து வந்தாலும் ஒரு சில உணவுகளை உண்ணும் போது மற்ற உணவுகளை அதனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று ஆயுர்வேத மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக மீன் சாப்பிட்டதும் ஒரு சில உணவுகளை கண்டிப்பாக உண்ணக்கூடாது. மீறி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாகும் என்று குறிப்பிட்டுள்ளனர். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்? 1. பொதுவாக மீனை வைத்து சமைத்த […]
’மார்பக புற்றுநோயை இப்படியும் தடுக்கலாம்’..!! ’இந்த உணவுகளையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள்’..!

You May Like