இப்போது உலகில் எங்குப் பார்த்தாலும் AIஇன் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கிறது. நாம் யோசித்துக் கூட பார்க்காத பல துறைகளில் இப்போது ஏஐ ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அப்படித்தான் ஏஐ வழக்கறிஞர் ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் உள்ள தேசிய நீதித்துறை அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நீதித்துறை அருங்காட்சியகம் மற்றும் ஆவணக் காப்பகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இந்த ஏஐ வழக்கறிஞர் உடன் கலந்துரையாடினார்.
நமது நாட்டின் தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், தனது நீதிமன்றத்தில் எப்போதும் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். இதற்காகப் பல முறை அவர் வழக்கறிஞர்களைக் கண்டித்துள்ளார். அவர் இன்று ஏஐ வழக்கறிஞருடன் கலந்துரையாடினார். இந்த ஏஐ வழக்கறிஞரின் அறிவை சோதிக்க விரும்பிய தலைமை நீதிபதி சந்திரசூட், “இந்தியாவில் மரண தண்டனை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அந்த ஏஐ வழக்கறிஞர், “ஆம், இந்தியாவில் மரண தண்டனை என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது. ஆனால், அரிதான வழக்குகளுக்கு மட்டும் இந்த தண்டனை வழங்கப்படுகிறது. மிகவும் கொடூரமான குற்றங்களுக்கு மட்டும் அத்தகைய தண்டனை விதிக்கப்படுகிறது” என்று பதில் அளித்தது. பார்க்க அப்படியே வழக்கறிஞர் போலக் கண்ணாடி, வழக்கறிஞர் அணியும் ஆடையுடன் இருந்த ஏஐ வழக்கறிஞர், சரியான பதிலை அளித்துள்ளது என்பதைப் போலவே தலைமை நீதிபதியின் ரியாக்ஷன் இருந்தது.
இந்நிகழ்ச்சியில் அடுத்த தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ள நீதிபதி சஞ்சீவ் கண்ணா உட்பட அனைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளும் கலந்து கொண்டனர். முன்னதாக, நீதித்துறை அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்துப் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், “இந்த புதிய அருங்காட்சியகம் சுப்ரீம் கோர்ட்டின் சிறப்புகளையும், தேசத்திற்கான முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கிறது.
இந்த அருங்காட்சியகம் நீதிபதிகள் பற்றியது மட்டும் இல்லை. அரசியலமைப்பு குறித்தும், அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் குறித்தும், நீதிமன்றம் இந்த நிலைக்கு வரக் காரணமாக இருந்த பார் உறுப்பினர்கள் குறித்தும் பல விஷயங்கள் இருக்கிறது. இது மக்கள் ஆர்வமாக வந்து சுற்றிப் பார்க்கும் இடமாக இருக்கும். பார் உறுப்பினர்கள் முதலில் இந்த இடத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
Read More : இந்த ஒரு ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் அடுத்த லட்சாதிபதி நீங்கள் தான்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!