வேங்கைவயல் வழக்கு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவத்தில் அண்மையில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலினத்தவர் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதா? என பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
மேலும், சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், அந்த குற்றப் பத்திரிகையில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் இருப்பதாகவும் அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் தான், வேங்கைவயல் வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
வேங்கைவயல் வழக்கு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்விரோத பிரச்சனை காரணமாகவே மலர் கலக்கப்பட்டதாகவும், வன்கொடுமை இல்லை எனவும் சிபிசிஐடி கூறியிருந்தது. இந்நிலையில் தான், இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.