fbpx

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆக.1 முதல் 30ம் தேதிவரை இதற்கு தடை!…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 30 நாட்கள் திருப்பதியில் ஏழுமலையான் கோவில் அருகில் இருக்கும் சுவாமி புஷ்கரணி திருக்குளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏழுமலையான் பக்தர்கள் ஒரு மாத காலம் குளத்தில் இறங்கி புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் கோவில் திருக்குளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அடுத்த மாதம் இறுதியில் பணிகள் முடிவடைந்த பிறகு குளத்தில் மீண்டும் தண்ணீர் நிரப்பப்பட்ட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

முதல் பயணி, பெண்ணாக இருந்தாலும் ஏற்றவேண்டும்!… ஓடிசாவின் மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த மகளிர் ஆணையம்!

Sun Jul 30 , 2023
முதல் பயணி பெண்ணாக இருந்தாலும் அவரை பேருந்தில் அனுமதிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஒடிசா மகளிர் ஆணையம் மாநில போக்குவரத்து துறையிடம் வலியுறுத்தியுள்ளது. ஒடிசாவில் மூடநம்பிக்கை காரணமாக பேருந்தில் முதல் பயணியாக பெண்களை கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் ஏற்றுவதில்லை. முதலில் பெண்களை ஏற்றினால் விபத்து ஏற்படும் அல்லது அன்றைக்கு டிக்கெட் விற்பனை மோசமாக இருக்கும் என கூறி வருகிறார்கள். இந்நிலையில் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க […]

You May Like