fbpx

டி இமானுக்கு சிவகார்த்திகேயன் செய்த துரோகம் இதுதான்..!! முன்னாள் மனைவி அதிர்ச்சி தகவல்..!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், நம்ம வீட்டுப் பிள்ளை, சீமராஜா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் டி.இமான். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சிவகார்த்திகேயனும் இமானும் எந்த திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்றவில்லை.

இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இமான், “இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மீண்டும் பயணிக்கிறது கஷ்டம். வரும் காலங்களில் அவரது படங்களில் பணியாற்ற மாட்டேன். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளார். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது என்றார்.

இந்நிலையில், இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் இந்த சர்ச்சைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அதில், “நடிகர் சிவகார்த்திகேயன் நீண்ட காலமாக எங்கள் குடும்ப நண்பராக இருந்தார். அவருக்கு நானும் இமானும் பிரிவதில் விருப்பமில்லை. ஒரு குடும்பம் சிதைந்து விடக்கூடாது என்பதற்காக அவரால் முடிந்த அளவிற்கு பேசிப்பார்த்தார். ஆனால், இமான் என்னை விவாகரத்து செய்வதில் உறுதியாக இருந்தார்.

இமானின் முடிவுக்கு சிவகார்த்திகேயன் ஆதரவாக இல்லாததால்தான் ‘துரோகம்’ செய்துவிட்டதாகக் கூறுகிறார் என நினைக்கிறேன். உண்மையிலேயே, சிவகார்த்திகேயன் மிக நல்ல மனிதர். ஆனால், தான் பேசிய வார்த்தைகளால் சிவகார்த்திகேயனின் குடும்பம் எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்பதை இமான் யோசித்துப் பார்க்கவில்லை. இப்படிப்பட்ட ஒருவருடன் 12 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம் என நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.

எங்களுக்கு உதவி செய்ய நினைத்த மனிதருக்கு தேவையற்ற சங்கடம். என் விவாகரத்து பிரச்சனைகளுக்குப் பின் நான் சிவகார்த்திகேயனிடம் பேசியது கூட கிடையாது. இமானுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்பதால் இப்படியெல்லாம் பேசி வருகிறார். ஒரு பெண்ணைப் பார்த்து வைத்த பின்பே இமான் என்னை மிரட்டி விவாகரத்து வாங்கினார்” எனக் கூறியுள்ளார்.

Chella

Next Post

ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த மகள்..!! செல்போன் மூலம் உடலை கண்டுபிடித்த அமெரிக்க தொழிலபதிர்..!!

Wed Oct 18 , 2023
ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மகளின் உடலை மொபைல் போன் மூலம் அமெரிக்க தொழிலதிபர் கண்டுபிடித்தார். அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியைச் சேர்ந்தவர் இயால் வால்ட்மேன். இவர், கணினி விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 2021ஆம் ஆண்டில் இயால் வால்ட்மேன் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தார். அவரது இளைய மகள் டேனிலா (24). இஸ்ரேலை சேர்ந்த நோம் என்பவரும் டேனிலாவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த 7ஆம் தேதி […]

You May Like