fbpx

இது என்னடா திருட்டுக்கே வந்த சோதன!… ஒருகால் ஷூக்களை மட்டும் திருடிய கும்பல்!… ஒன்ன மட்டும் வச்சு என்ன பண்ணுவாங்க?

பெரு நாட்டில் கடைக்குள் புகுந்து 200 வலது கால் ஷூக்களை மட்டும் திருடிய வினோதமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெரு நாட்டின் ஹூவான்காயோ என்ற பகுதியில் ஷூ கடை இயங்கிவருகிறது. இங்கு, ஒரு வினோதமான திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அதில், 3 பேர் அடங்கிய ஒரு திருட்டு கும்பல் வந்து , கதையினை சேதப்படுத்தி, ஒரு வாகனத்தில் 200 உயர் ரக ஷூக்களை களவாடியுள்ளனர். இதில், வேடிக்கை என்னவென்றால், அவர்கள் திருடி சென்ற 200 ஷூக்களும் வலது கால் உடையது. அது திருடிய அவர்களுக்கும் பயன்படாது, மீதம் இருக்கும் ஷூக்கள் கடை உரிமையாளர்களுக்கும் பயன்படாது. அவர்கள் திருடிய ஷூக்களின் மதிப்பு 13 ஆயிரம் டாலர்கள் ஆகும். இதன் இந்திய மதிப்பு 10 லட்ச ரூபாய் ஆகும். இந்த திருட்டு சம்பவமானது கடையில் உள்ள கேமிராவில் பதிவாகியுள்ளது. அதனை கொண்டு பெரு நாட்டின் போலீசார் திருட்டு கும்பலை தேடி வருகின்றனர்.

Kokila

Next Post

கருவில் இருந்த குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை!... அமெரிக்க மருத்துவர்கள் சாதனை!

Sun May 7 , 2023
அமெரிக்காவில் கருவில் இருந்த குழந்தைக்கு மூளையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனைப் படைத்துள்ளனர். குழந்தையின் மூளைக்கும் இதயத்திற்கும் ரத்தம் எடுத்துச்செல்லும் ரத்த குழாய் சரியாக வளரவில்லை. அது குழந்தைக்குப் பலவிதமான உடல்நல பிரச்சினைகளை உருவாக்கும். அதைக் கண்டறிந்த மருத்துவர்கள் பாஸ்டனில் உள்ள பிர்ஹம், மகளிர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தனர். குழந்தை பிறக்க இன்னும் சில நாள்களே இருந்த நிலையில் கர்ப்பிணிக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அந்த […]

You May Like