fbpx

’நீங்க பண்ற பெரிய தப்பே இதுதான்’..!! பெண்களிடையே புற்றுநோய் அதிகரிக்க இதுதான் முக்கிய காரணமாம்..!!

இந்தியா உள்பட உலகமெங்கும் உயிரைக்கொல்லும் புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருகிறது. 2022இல் இந்தியாவில் மட்டும் இந்த புதிய வகை புற்றுநோயினால் 14.13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 9.16 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்களை விட பெண்களே இந்தப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பல வகையான பெண்கள் மார்பகம், கருப்பை வாய், பெருங்குடல் மற்றும் வாய் புற்றுநோயால்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால், புற்றுநோயின் காரணிகளை நாம் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய அவசரமான வாழ்க்கை முறையினாலும், ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தாலும், பணி தொடர்பான மன அழுத்தம் மற்றும் புகைப்பழக்கத்தாலும் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உடல் பருமன் : அதிக உடல் எடையால் டயாபடீஸ் மற்றும் இதய நோய்கள் வரும் ஆபத்து அதிகரிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இது பல வகையான புற்றுநோய் வருவதற்கும் காரணமாக இருப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம்முடைய சமூகத்தில் உடல் பருமனால் அவதிப்படுகிறவர்கள் அதிகரித்து வருவதற்கு சோம்பேறித்தனமான வாழ்க்கை முறையும் ஒரு காரணமாகும். கொழுப்பு திசுக்கள் வழக்கமாக அதிகளவு ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்கிறது. இதற்கும் மார்பகம், கர்ப்பபை மற்றும் எண்டோமெட்ரியல் புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

பரிசோதனைகளை புறக்கணிப்பது : நோயை கண்டறிவதற்கான சிகிச்சையோ அல்லது போதுமான பரிசோதனை மையங்கள் இல்லாமல் இருப்பதும் இந்தியாவில் அதிகப்படியான புற்றுநோயாளிகள் இருப்பதற்கு காரணமாகும். மேலும், நாட்டின் பல பகுதிகளில் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துகொள்வது குறித்து தவறான எண்ணம் நிலவுகிறது. இந்தியாவில் வெறும் 1.9 சதவிகித பெண்களே கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையை செய்துகொள்கிறார்கள்.

குறைவான உடல் இயக்கம் : இன்றுள்ள இளைஞர்கள் இடையே போதுமான உடல் இயக்கம் இல்லாததும் புற்றுநோய் அதிகரிப்பதற்கு ஒரு காரணமாகும். மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்களிடையே நிலவும் குறைவான உடல் இயக்கத்திற்கும் மார்பக புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்து டிவி அல்லது மொபைல் பார்ப்பது, ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்ற சோம்பேறித்தனமான வாழ்க்கை முறையால் இளம் பெண்களிடையே PCOD/ PCOS பாதிப்புகள் அதிகரிக்கிறது. மேலும் இது நுரையீரல், குடல் புற்றுநோய் வரும் ஆபத்தையும் அதிகரிக்கிறது.

புகைப்பழக்கம் : புகையிலையில் உள்ள தீங்கு நிறைந்த 7,000 ரசாயனங்கள் நமது செல்களில் மாற்றங்களை உண்டாக்கி புற்றுநோய் வரும் ஆபத்தை அதிகரிக்கிறது. புகைபிடித்தல் மற்றும் அதிகப்படியான மதுப்பழக்கம் செரிமானப் பாதைகளான உதடுகள், வாய், தொண்டை, உணவுக்குழாய் மற்றும் குடலை பாதித்து புற்றுநோயை உண்டாக்குகிறது. இதில் ஏதாவது ஒரு பழக்கம் அல்லது இரண்டுமே இருந்தால், அது உயிரைப் பறித்துவிடும். அதுமட்டுமின்றி இந்தப் பழக்கத்தால் மார்பகம், கருப்பை வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயும் வர வாய்ப்புள்ளது.

உணவே மருந்து : முறையான சரிவிகித உணவு முறையே சிறந்த மருந்தாகும். புற்றுநோய், டயாபடீஸ் மற்றும் இதய நோய்கள் போன்ற தொற்றா நோய்கள் வராமல் நம் உடலை பாதுகாக்க வேண்டுமென்றால், ஆரோக்கியமான டயட்டை கடைபிடிக்க வேண்டும். கூடுமானவரை வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொள்ளுங்கள். ஏனென்றால், இதில் தான் ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கும். உடலுக்கும் கேடு விளைவிக்காது.

Read More : தண்ணீர் பற்றாக்குறையால் உணவு உற்பத்தி பாதியாக குறையும் அபாயம்..!! வெளியான பரபரப்பு ஆய்வறிக்கை..!!

English Summary

Cancer death rate is increasing rapidly all over the world including India.

Chella

Next Post

சூப்பர் சான்ஸ்...! வேலை இல்லாத நபர்களின் கவனத்திற்கு... இன்று காலை 9.30 மணி முதல்...! மிஸ் பண்ணிடாதீங்க

Fri Oct 18 , 2024
An employment camp is going to be held today in Kanchipuram district.

You May Like