1999-ம் ஆண்டு வெளியான வாலி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஜோதிகா. இதை தொடர்ந்து குஷி, டும் டும் டும், காக்க காக்க, சந்திரமுகி, மொழி, தூள் என பல ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார். தனது கெரியரின் உச்சத்தில் இருக்கும் போதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜோதிகா.
திருமணத்திற்கு பின்னர் நடிப்பதில் இருந்து சில ஆண்டுகள் இடைவெளி எடுத்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் கம்பேக் கொடுத்தார். பெண்களை மையமாக கொண்ட கதைகளில் நடித்து வருகிறார். தற்போது ஹிந்தி படங்களில் ஜோதிகா கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் நடிகை ஜோதிகா, தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு காட்டப்படும் பாரபட்சம் குறித்து பேசி உள்ளார். சமீபத்தில் பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர் “ இன்றைய தமிழ் சினிமாவில், நடிகைகளுக்கு வயதாவைதை யாரும் விரும்புவில்லை. ஆனால் பெண்களை மட்டுமே முன்னணி நடிகைகளாகக் கொண்டு பெண்களைப் பற்றிய படங்களை எடுக்க இயக்குநர்கள் விரும்புவதில்லை.
எனக்கு 28 வயதில் என் குழந்தைகள் பிறந்தனர், அதன் பிறகு நான் மிகவும் வித்தியாசமான வேடங்களில் நடிக்கத் தொடங்கினேன். உண்மையில், 28 வயதிற்குப் பிறகு நான் ஒரு நட்சத்திரம் அல்லது ஹீரோவுடன் பணியாற்றவில்லை என்று நினைக்கிறேன். இது ஒரு பெரிய சவால், ஏனென்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை முற்றிலும் புதிய இயக்குனர்களுடன், நீங்களே உருவாக்குகிறீர்கள். இது எல்லாம் வயது காரணியைப் பொறுத்தது. நடிகைகளை பொறுத்த வரை முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிப்பது போராட்டம் தான்.
அந்த நாட்களில் இருந்தது போல கே பாலச்சந்தர் போன்ற பெரிய திரைப்பட இயக்குனர்கள் அல்லது அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள் இப்போது இல்லை. இப்போது இருக்கும் இயக்குனர்கள், பெண்களுக்கான படங்களையோ அல்லது பெண்கள் முக்கிய பங்கு வகிக்கும் கதைகளையோ இயக்குவதில்லை. பெரிய நடிகர்களுக்காகப் படம் எடுக்கிறார்கள். சமீப காலங்களில், ஒரு நடிகைக்காக ஒரு பெரிய இயக்குனர் படம் எடுப்பது என்பது மிகவும் குறைவு என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறினார்.
தற்போது ஜோதிகா டப்பா கார்டெல் என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். ஹிதேஷ் பாட்டியா இயக்கி உள்ள இந்த வெப் சீரிஸை எக்செல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இதில் ஷபானா ஆஸ்மி, கஜ்ராஜ் ராவ், ஜோதிகா, நிமிஷா சஜயன், ஷாலினி பாண்டே, அஞ்சலி ஆனந்த், சாய் தம்ஹங்கர், ஜிஷு சென்குப்தா, லில்லிட் துபே மற்றும் பூபேந்திர சிங் ஜாதவத் போன்ற விமர்சன ரீதியாக புகழ்பெற்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.
Read More : அக்சய் குமார், பிரபாஸ், மோகன் லால் நடிப்பில் உருவாகியுள்ள “கண்ணப்பா” படத்தின் 2வது டீசர் வெளியானது…