குங்ஃபூ தற்காப்பு கலை பயில விரும்பும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் தாரக மந்திரம் புரூஸ் லீ. சீன வம்சாவளியைச் சேர்ந்த புரூஸ் லீ நவம்பர் 27 1940ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தார். சிறு வயதிலேயே குங்ஃபூ கலையில் சில மாற்றங்களை கொண்டு வந்த இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், ஹாலிவுட் படங்களிலும் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள் மூலம் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார்.
புரூஸ் லீயின் நடிப்பு வாழ்க்கை சிறு வயதிலேயே தொடங்கிவிட்டது. தனது 18 வயதிற்குள் பல படங்கள் மற்றம் தொலைக்காட்சி நிக்ழச்சிகளில் நடித்தார். அமெரிக்காவில் இருந்து ஹாக்ங் திரும்பிய இவரது முதல்படம் 1971ஆம் ஆண்டு ’தி பிக்பாஸ்’ என்ற பெயரில் வெளிவந்தது. இவரது அதிவேக சண்டைகளும் கண்களில் அவர் காட்டிய வெறியும் படத்தை மிகப் பெரிய அளவில் வெற்றி பெற செய்தது. ஆசியாவில் 12 மில்லியன் டாலர்கள் இப்படம் வசூலித்தது.
கடைசியாக அவர் நடித்த படம் ‘எண்டர் த டிராகன்’. இப்படம் உலகையை திரும்பி பார்க்க வைத்தாலும். அதை பார்க்க புரூஸ் லீ இல்லாமல் போனார். இப்படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர் மரணம் அடைந்தார். அதாவது 1973ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி காலமானார். தலைவலியால் தூங்க சென்ற புரூஸ் லீ, பின்னர் நினைவு திரும்பாமலேயே குயின் எலிசபெத் மருத்துவமனையில் தனது 32 வயதில் காலமானார். அவரது மரணம் மர்மமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், இவருடைய மரணம் பற்றி பல்வேறு கதைகள் கூறப்பட்டு வருகின்றன. அதில், அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக கூறப்படும் தகவலும் ஒன்று. இந்நிலையில், 50 ஆண்களுக்குப் பிறகு புரூஸ் லீ அவருடைய மரணத்துக்கான காரணம் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது. ‘கிளினிக் கல் ஜர்னல்’ என்ற புத்தகத்தில், அவர் மூளை பெரிதாகி இறந்ததாக கூறப்பட்டுள்ளது.
‘புரூஸ் லீ அதிகமாக உடற்பயிற்சி செய்பவர். இதற்காக அவர் அதிகளவில் பழச்சாறுகளையும், புரோட்டின் திரவத்தையும் அடிக்கடி குடிப்பார். இதன் காரணமாக அவருக்கு அதிகளவில் தண்ணீர் தாகம் எடுக்கும். எனவே, அவர் அதிகளவில் தண்ணீர் குடிப்பார். ஆனால், அதிகப்படியான இந்த தண்ணீரை சிறுநீராக பிரிக்கும் சக்தியை அவருடைய சிறுநீரகம் பெற்றிருக்கவில்லை. நாளடையில் சிறுநீரகம் இந்த சக்தியை அதிகமாக இழந்ததால், அவருடைய மூளையின் அளவு பெரிதாகி விட்டது.
சிறுநீரகத்தால் சிறுநீரை பிரிக்க முடியாமல் போனால், அதன் பின்விளைவாக மூளையில் நீர்வீக்கம் ஏற்பட்டு எடைகூடும். இதை மருத்துவ ரீதியாக, ‘எடிமா’ என்று அழைக்கின்றனர். வழக்கமாக மனிதனின் மூளை எடை சராசரியாக 1,400 கிராம் இருக்கும். ஆனால், புருஸ் லீயின் மூளை 1,575 கிராமாக பெரிதாகவிட்டது. இதன் காரணமாகவே, அவருக்கு திடீர் இறப்பு ஏற்பட்டுள்ளது. அவருடைய பிரேத பரிசோதனையின் மூலம் இது தெரியவந்தது, என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.