fbpx

தங்கம் வாங்க இதுதான் செம சான்ஸ்.. ஒரே நாளில் ரூ.296 குறைந்ததால் மகிழ்ச்சி..

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.37,040-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒஒரு கிராமுக்கு ரூ.37 குறைந்து ரூ.4,630-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.37,040-க்கு விற்பனையாகிறது.. எனினும் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.61-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.61,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Maha

Next Post

#Breaking : இலங்கையின் 8-வது அதிபராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க.. மக்கள் கடும் எதிர்ப்பு..

Thu Jul 21 , 2022
இலங்கையின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார். இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி அந்நாட்டு கடந்த சில மாதங்களாகவே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.. எனினும் அதிபர் கோட்டபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என்று போராடங்கள் மீண்டும் வலுப்பெற்றன.. இதையடுத்து தனது அதிகாரப்பூர்வ அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடிய […]
’இலங்கையில் முடிவுக்கு வருகிறது அவசரநிலை பிரகடனம்’..! - அதிபர் ரணில் விக்கிரமசிங்கே

You May Like