fbpx

இதுதானா சேர்ந்த கூட்டம்!… திரும்பிய பக்கமெல்லாம் மஞ்சள் படை!… CSK-GT போட்டியை காண திரண்ட ரசிகர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் மஞ்சள் உடை அணிந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்துள்ளனர்.

ஐபிஎல் 16ஆவது சீசன் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஃபைனல் 2023 மழை குறுக்கீடு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தின் கோட்டை என்று சொல்லப்படும் அகமதாபாத்தில் உள்ள விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலலையில் நரேந்திர மோடி மைதானம் தார்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது.இதுவரையில் நடந்த 14 லீக் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த முதல் குவாலிஃபையர் சுற்று போட்டியில் சிஎஸ்கே அணியிடம் தோற்று 2ஆவது குவாலிஃபையர் போட்டியில் விளையாடியது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டி முன்னேறியது.

இதே போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய ஐபிஎல் 14 லீக் போட்டிகளில் 8ல் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடந்த முதல் குவாலிஃபையர் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலமாக 10ஆவது முறையாக சிஎஸ்கே இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.கடந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய குஜராத் டைட்டன்ஸ் 2ஆவது முறையாக இன்றைய போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பொதுவாக சென்னை போட்டி என்றால் தான் தோனிக்காகவும், சிஎஸ்கே அணிக்காகவும் லட்சக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள். ஆனால், அதையும் தாண்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டிக்காக மைதானத்திற்கு வெளியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் Yellow உடையில் ஒன்று திரண்டு வந்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படமும், வீடியோவும் வைரலாகி வருகிறது. இது ஒரு புறம் இருக்க நரேந்திரமோடி மைதானத்தில் மழை கொட்டி தீர்க்கும் நிலையில், மைதானத்தில் திரண்ட ரசிகர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் சிஎஸ்கே சிஎஸ்கே சிஎஸ்கே என்று கோஷமிட்டு வருகின்றனர்.

Kokila

Next Post

கொடிய பூஞ்சை பாதிப்பு!... பொது சுகாதார அவசரநிலையை அறிவிக்க WHO-க்கு அமெரிக்கா, மெக்சிகோ கோரிக்கை!

Mon May 29 , 2023
கொடிய பூஞ்சை பரவலை தடுக்கும் வகையில், பொது சுகாதார அவசரநிலையை அறிவிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோ கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் 24 மாகாணங்கள் மற்றும் பிற நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோருக்கு மெக்சிகோ நாட்டை சேர்ந்த 2 மருத்துவ மையங்களில் அழகுக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டன. எனினும், அவர்களில் பலருக்கு கொடிய பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டது. அந்த நோயாளிகளில் 2 பேர் உயிரிழந்து விட்டனர். […]

You May Like